நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘வேட்டையாடு விளையாடு’ படம் இன்றோடு 17 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


வேட்டையாடு விளையாடு


தமிழ் சினிமாவில் எத்தனையோ காவல்துறை சார்ந்த  படங்கள்  வெளியாகியுள்ளது. அதில் ரஜினி தொடங்கி சூர்யா வரை பலரின் போலீஸ் கேரக்டர்களும் ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அந்த வகையில் 2003 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் ‘காக்க..காக்க’ படம் வெளியானது. வித்தியாசமான திரைக்கதையை இப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனன், 2006 ஆம் ஆண்டு மீண்டும் போலீஸ் கதையை கையில் எடுத்தார். அதுதான் ‘வேட்டையாடு விளையாடு’. 


தன்னுடைய மூன்றாம் படத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள கமல்ஹாசனை இயக்கியதை தமிழ் சினிமாவே வியந்து பார்த்தது. தன்னுடைய தசாவதாரம் படத்தின் கதையை கௌதம் இயக்க வேண்டும் என கமல் நினைத்தார். ஆனால் அதிதீவிர கமல் ரசிகரான கெளதம், ‘வேட்டையாடு விளையாடு’ கதையை இயக்க பிடிவாதமாக இருந்ததால் இப்படம் உருவானது. அதனால் தான் இப்படம் காலத்தை கடந்து நிற்கிறது. 


வேட்டையாடு விளையாடு படத்தில் கமல்ஹாசன், கமாலினி முகர்ஜி, ஜோதிகா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கமல் நடித்திருந்த டிசிபி ராகவன்  கேரக்டர் இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் பிடித்த கேரக்டராக அமைந்தது. இந்தப் படம் உருவானபோது அவருடைய நிஜ வயது 50 ஆக இருந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். 


Adiyae Movie Review: ‘என்னங்க படம் இது’ .. டைம் டிராவலில் சிக்கிய ஜி.வி.பிரகாஷ்.. ‘அடியே’ பட விமர்சனம் இதோ..!


படத்தின் கதை 


பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து  கொடூரமாக கொன்று புதைக்கும் இரண்டு சைக்கோ கொலைகாரர்களை டிசிபி ராகவன் தன் பாணியில் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே இப்படத்தின் கதையாகும். படத்தின் பெரும் பகுதி அமெரிக்காவில்  படமாக்கப்பட்டது. கிட்டதட்ட ஹாலிவுட் ஸ்டைலில் படமானது எடுக்கப்பட்டிருக்கும். 


கமல் - ஜோதிகா இடையேயான முதிர்ச்சியான காதல், கமல் - கமாலினி இடையே இருக்கும் க்யூட் காதல் என ஒருபுறம் இப்படம் ரசிக்க வைத்தாலும், மறுபுறம் வில்லன்களை தன்பால் ஈர்ப்பார்களாகக் காண்பித்த விதம் விமர்சனத்திற்குள்ளானது. கமலின் முதல் காட்சியே   “என் கண்ணு வேணும்னு கேட்டியாமே” என ஆரம்பிக்கும். கிளைமேக்ஸில்  ”சின்ன பசங்களா யார் கிட்ட” என அவர் பேசும் பன்ச் வசனங்கள் வேற மாதிரியாக இருந்தது. 


 ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள், பின்னணி இசையும் படத்துக்கு வலுசேர்த்தது. மிகப்பெரிய வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்ற 'வேட்டையாடு விளையாடு படம் சமீபத்தில் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Partner Movie Review: நீண்ட இடைவெளிக்கு பின் கம்பேக் கொடுத்தாரா ஆதி? - எப்படி இருக்கு பாட்னர் திரைப்படம்: முழு விமர்சனம்!