நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி தங்கள் இரட்டைக்குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடி புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.


தங்கத் தேரில் ஓணம் வந்தல்லோ!


கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி,  அக்டோபர் மாதம் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயாகினர்.


உயிர் ருத்ரோநீல் -  உலக் தெய்வக் என தங்கள் குழந்தைகளுக்குப் பெயரிட்டுள்ள நயன் - விக்னேஷ் தம்பதி, தொடர்ந்து குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


இந்நிலையில் இன்று தங்கள் இரட்டைக் குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடும் க்யூட்டான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தன் இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


 






இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றன.


நயன்தாராவின் உயிர், உலகம்


நடிகை நயன்தாரா சமூக வலைதளங்களில் எந்தக் கணக்கையும் வைத்திராத நிலையில், விக்னேஷ் சிவன் தொடர்ந்து தன் மனைவி நயன் குழந்தைகளுடன் இருக்கும் க்யூட் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்.


முன்னதாக தங்கள் முதலாமாண்டு ஆனிவர்சரியை குழந்தைகள் உயிர் உலக் உடன் கொண்டாடிய நயன் - விக்கி தம்பதி, இந்தப் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.


நயன்தாரா தற்போது ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதிக்க உள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளது அவரது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


பாலிவுட்டில் கலக்கல் என்ட்ரி தரும் நயன்!


முன்னதாக கன் உடன் நயன்தாரா இருக்கும் அவரது கதாபாத்திர போஸ்டரும், ஷாருக் உடன் நயன் ரொமான்ஸ் செய்யும் ஹய்யோடா பாடலும் இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளின.


மேலும் ஒருபுறம் திருமணமாகி குழந்தைகளுடன் பிஸியாக நேரம் செலவிட்டு  வரும் கையுடன், நயன்தாரா தொடர்ந்து கரியரிலும் கவனம் செலுத்தி புது உயரங்களை எட்டி வருவது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


ஜவான் படம் வரும் செப்டெம்பர் 7ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை விடுமுறையைக் குறிவைத்து ரிலீஸாக உள்ளது. அட்லீ இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில், அனிருத் இப்படத்துக்கு இசையமைக்க உள்ளார். தீபிகா படுகோன் இரண்டாவது ஹீரோயினாக   விஜய் சேதுபதி வில்லனாகக் களமிறங்குகிறார்.  பிரியாமணி, யோகி பாபு, சான்யா மல்ஹோத்ரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.