Leo audio release: லியோ ஆடியோ ரிலீஸ் குறித்த வதந்திக்கு விளக்கம் அளித்து தயாரிப்பு நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Continues below advertisement

லியோ:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்திருக்கும் லியோ படம் வரும் வரும் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் டிரோல் செய்து வருகின்றனர். அந்த வகையில் படம் ரிலீசை ஒட்டி லியோவின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் இணையத்தில் தீயாய் பரவியது. 

நேற்று வெளியான தகவலில் லியோ இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்றும், ஆனால் விழாவுக்கான அனுமதி யாருக்கும் வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், லியோ படத்தின் விழாவுக்கான அனுமதி பெற சென்னை, செங்கல்பட்டு, வடக்கு மற்றும் தெற்கு ஆற்காடு விநியோகஸ்தர்கள் உரிமையை அமைச்சர் உதயநிதிக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு தர வேண்டும் என அழுத்தம் கொடுப்பதாகவும் தகவல் பரவியது. 

Continues below advertisement

தயாரிப்பு நிறுவனம் விளக்கம்:

இதனால் லியோ இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் சர்ச்சையானது. இந்த நிலையில் லியோ இசை வெளியீடு விழா குறித்த தகவலுக்கு படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ விளக்கம் அளித்துள்ளது. வதந்தி குறித்த தகவலை ரீ டிவீட் செய்துள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம், “ சார் இந்த செய்தி போலியானது” என குறிப்பிட்டுள்ளது. இதனால் லியோ குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோவில், த்ரிஷா, அர்ஜூன், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் உள்ளிட்ட ரசிகர்கள் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். படத்தின் முதல் பாடலான நான் ரெடி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அர்ஜூன் மற்றும் சஞ்சய் தத் பிறந்த நாளை ஒட்டி வெளியான கிளிம்ப்ஸ் போஸ்டர்களும் டிரெண்டாகின.

இந்த நிலையில் அண்மையில் வெளியான லியோ போஸ்டரில் சஞ்சய் தத் கழுத்தை விஜய் நெறிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. படம் ரிலீஸாவதை ஒட்டி இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அண்மையில் வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு விஜய் திரும்பிய புகைப்படமும் இணையத்தில் வெளியாகி டிரெண்டானது. 

மேலும் படிக்க: Highest Overseas Collection: பதான் டூ ஜெயிலர்.. இந்த ஆண்டு வெளிநாட்டு பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் வேட்டை செய்த இந்தியப் படங்கள்!

Mark Antony Box Office: 9 நாட்களில் மார்க் ஆண்டனி படம் செய்த சாதனை.. பட்டையைக் கிளப்பும் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!