மீசையை முறுக்கு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் ஆத்மிகா. அவர் கோடியில் ஒருவன், காட்டேரி, திருவின் குரல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 


ஆத்மிகா தற்போது பிரபல மொபைல் நிறுவனம் மீது ஒரு அதிர்ச்சி புகாரை கூறி இருக்கிறார். Autopay ஆஃப் செய்த பிறகும் தனது கணக்கில் இருந்து 4999 ருபாய்யை எடுத்துவிட்டார்கள் என அவர் புகார் கூறி இருக்கிறார்.  மாத சந்தா சரியான தேதியில் செலுத்த மறக்கும் சூழலில், அபராத தொகை வசூலிக்கப்படுவது வழக்கம். இதனை தவிர்க்க பெரும்பாலான நிறுவனங்கள் auto pay option-ஐ வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உள்ளது. இதனை தேர்வு செய்திருந்தால் அந்த குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் குறிப்பிட்ட தேதியில் பிடித்தம் செய்யும்.





அதன் பிறகு இந்த பிரச்சனை பற்றி புகார் தெரிவித்து அந்த பணத்தை மீண்டும் பெற வழி கிடைத்துள்ளதாகவும் அவர் மற்றொரு ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறார். 






நடிகை ஆத்மிகா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஏராளமான பாலோவர்ஸ் உள்ளனர். 


மேலும் படிக்க..


CM MK Stalin: சோஷியல் மீடியாக்களை கவனிங்க - மோதல்கள் உண்டாக்குவோர் மீது நடவடிக்கை எடுங்க - முதலமைச்சர் உத்தரவு..!


Senthil Balaji case: கைதுக்கான ஆவணங்களை வாங்க மறுத்தது ஏன்? செந்தில் பாலாஜி விவகாரத்தில் நீதிபதி கார்த்திகேயன் சரமாரி கேள்வி