பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படத்தில் ட்ரெய்லர் ரிலீசாகி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பலரும் பாராட்டி வரும் நிலையில், ஷாருக் கான் டிவிட்டரில் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.


ஷாருக் கான் ட்வீட்:


அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான், நயந்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் ட்ரெய்லர் வெளியானது. இசையமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளர் விஷ்ணு, வசனகர்த்தா சுமித் அரோரா,. படத்தொகுப்பு செய்த ரூபன், உடன் நடித்த யோகி பாபு, விஜய் சேதுபதி, டான்ஸ் மாஸ்டர் ஷோபி பால்ராஜ் உள்ளிட்டோரின் ட்வீட்களுக்கு நன்றி தெரிவித்து Quote Tweet செய்துள்ளார்.




” லவ் யூ டு தி மூன்! நம் வாம்பயர் இரவுகளை மிஸ் செய்வேன்’ என அனிருத்-திற்கு டிவீட் செய்துள்ளார். 


ஒளிப்பதிவாளர் விஷ்ணுவின் திறமையை பாராட்டி உள்ளார். திரைப்படத்தில் தன்னை அழகாக காட்டியதற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். 


படத்தொகுப்பாளர் ரூபர், நன்றாக எடிட் செய்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். யோகி பாபுவுடன் நடித்தது ஜாலியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். 


திரைப்படத்தில் நல்லா ஆட வைத்த டான்ஸ் மாஸ்டர் ஷோபி மற்றும் அவரது குழுவினருக்கு அன்பு என்று தெரிவித்துள்ளார். 




விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்ததில் பெருமிதம் அடைவதாகவும், தமிழ் மொழி கற்றது தந்தது, சுவையான உணவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.


இதை சாத்தியப்படுத்திய அட்லீக்கும் வாத்துகளை தெரிவித்துள்ளார்.


 ஜவான் படத்தின் டிரைலர் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. ஷாருக்கான் , நயன்தாரா , விஜய் சேதுபதி , தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்கள் மட்டுமில்லாமல் இன்னும் சில தமிழ் நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். இவ்வளவு பெரிய தமிழ் நடிகர்கள் பட்டாளத்தைக் கொண்டு ஒரு பாலிவுட் படம் வருவது இதுவே முதல் முறையாக இருக்கலாம். ஜவான் திரைப்படத்தில்  நடித்திருக்கு கோலிவுட் நடிகர்களைப் பார்க்கலாம்.


அட்லீ முதன் முதலில் இந்தியில் இயக்கியுள்ள இந்த படத்தை ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இந்த படம் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளில் வரும் 7-ந் தேதி வெளியாக உள்ளது.