Vishal 34: அண்மையில் விஷால் நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. டைம் ட்ராவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட மார்க் ஆண்டனி படம், வசூலில் ரூ.100 கோடியை நெருங்கியது.


இதற்கிடையே, மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிட மும்பை சென்சார் போர்டுக்கு ரூ.6.5 லட்சம் பணம் கொடுத்ததாக கூறி விஷால் அளித்த புகார் இந்திய அளவில் பேசுபொருளானது. மத்திய அமைச்சரகம் மும்பை சென்சார் போர்டு மீது விசாரணையை மேற்கொண்டனர்.


இந்த நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷால் நடிக்கும் விஷால் 34 படத்தின் அறிவிப்பு வெளியானது. விஷால் நடித்த தாமிரபரணி, பூஜை படங்களை இயக்கி வெற்றி கொடுத்த ஹரி இயக்கும் Vishal 34 படத்தில் தற்போது விஷால் இணைந்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்கும் விஷால் 34 படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ளது. 


படப்பிடிப்புக்காக தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் சென்ற விஷாலை M.குமாரசக்கனாபுரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சந்தித்துப் பேசினர். அப்போது, தங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவதாகவும், அதை நிறைவேற்றி தரும்படி கோரிக்கையும் வைத்தனர்.


அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக பதிலளித்த விஷால் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளார். அதன்படி, தனது மேலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் மக்கள் நல இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பிரகாஷ், M.குமாரசக்கனாபுரம் ஊராட்சித் தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரிடமும் கலந்தாலோசனை செய்தார். 




பின்னர் அந்த பகுதி மக்கள் பலனடையும் வகையில், நடிகர் விஷாலுக்கு சொந்தமான  தேவி அறக்கட்டளை சார்பில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நடைபெற்றது. ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டதுடன், தண்ணீர் தேக்கி வைக்க இரண்டு பெரிய குடிநீர் தொட்டியையும் அமைத்து தந்துள்ளார். இந்தப் பணிகள் முழுவதும் நிறைவடைந்து கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உடனே தங்களின் கோரிக்கையை நிறைவேற்றிய விஷாலுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க: Actor Vijay: அன்புமணி ராமதாஸ்க்கு நடிகர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து


Bigg Boss 7 Tamil: அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்த பிக்பாஸ் - கண்ணீர் விட்டு அழுத அக்‌ஷயா