தளபதி 69


ஒரு பக்கம் தி கோட் படத்தின் படப்பிடிப்பு, மறுபக்கம் கட்சிப் பணிகள் என பயங்கர பிஸியாக இருந்து வருகிறார் நடிகர் விஜய். தி கோட் படத்திற்கு அடுத்ததாக தளபதி 69 (Thalapathy 69) படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்துக்குப் பிறகு விஜய் அரசியலுக்கு வருகை தர இருப்பதால் இதுவே விஜய்யின் கடைசி படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க இருப்பதாகத் தகவல்கள் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப் பட்டுள்ளன. ஐசரி கணேஷ் இந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் கடைசி படமாக இருப்பதால் இந்தப் படத்திற்கு விஜய் தனது சம்பளத்தை பலமடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. 


தளபதி 69இல் விஜய்யின் சம்பளம்






தமிழ் மட்டுமில்லாமல் ஆசிய கண்டத்திலேயே அதிக சம்பளம் பெறும் நடிகராக ரஜினிகாந்த் முதலிடத்தில் இருந்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி ‘தலைவர் 171’ படத்தில் நடிக்க இருக்கிறார். சன் பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்திற்காக ரஜினிகாந்த் ரூ.260 முதல் 280 கோடி வரை சம்பளம் பெற உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


தென்னிந்திய நடிகரான பிரபாஸ், ‘கல்கி 289’8 படத்திற்காக ரூ.150 கோடிகள் சம்பளமாகப் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்ததாக அல்லு அர்ஜூன் புஷ்பா 2 படத்திற்காக ரூ.125 கோடி சம்பளமாகப் பெற்றுள்ளார். தற்போது நடிகர் விஜய் ‘தளபதி 60’ படத்திற்காக ரூ.250 கோடிகள் சம்பளமாகக் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலின்படி ரஜினிக்கு அடுத்தபடியாக ஆசிய கண்டத்தில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது நடிகராக நடிகர் விஜய் இடம்பிடித்துள்ளார்.


தி கோட்


விஜய் நடிக்கும் தி கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது, யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா , லைலா , மோகன், பிரேம்ஜி, வைபவ், மீனாக்‌ஷி செளதரி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிரார்கள். ஹைதராபாத் , சென்னை, தாய்லாந்து, மாஸ்கோ, இஸ்தான்புல், இலங்கையில் நடைபெற்ற இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் நடைபெற்று முடிந்துள்ளது.