காந்தாரா 2 : 4 ஆவது முறையாக விபத்து 

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த படம் காந்தாரா. இதனைத் தொடர்ந்து பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. தொடர்ச்சியாக படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டு வருவது மர்மமாக இருந்து வருகிறது . மொத்த படப்பிடிப்பு காலத்தில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள். இப்படியான நிலையில் நான்காவது முறையாக காந்தாரா படப்பிடிப்பில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஷிவமோகாவில் படப்பிடிப்பு நடந்தபோது  ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட 30 பேர் கொண்ட படகு ஆற்றில் கவிந்துள்ளது. அதிர்ஷவசமாக இந்த விபத்தில் அனைவரும் பாதுகாப்பாக உயிர்தப்பினார்கள்

தெய்வ குத்தமா ? பப்ளிசிட்டியா ?

தென் கர்நாடக நாட்டார் தெய்வங்களை மையமாக வைத்து உருவாகி வருகிறது காந்தாரா திரைப்டம். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோதே எல்லா விதமான சடங்கு சம்பிரதாயங்களை செய்து படப்பிடிப்பை தொடங்கியது படக்குழு. முதலில் படத்தின் ஜூனியர் நடிகர்கள் சென்ற பேருந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இன்னொரு முறை படத்திற்கு அமைக்கப் பட்டிருந்த செட் மோசமான வானிலை காரணமாக இடிந்து சேதமடைந்து படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. கடந்த மே மாதம் படத்தில் பணியாற்றிய கபில் என்பவர் ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து படத்தில் நடித்த ராகேஷ் பூஜாரி மற்றும் கலாபவன் நிஜூ இருவரும் அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழ்ந்தார்கள்.

பூதங்களை வைத்து படம் எடுப்பதால் இந்த அசம்பாவிதங்கள் நடக்கின்றன என பலர் பேசத் தொடங்கினார்கள். தெய்வங்களுக்கு வனிகமையப்படுத்துவது பிடிக்கவில்லை அதனால் அவை இந்த மாதிரியான உயிர்பலி வாங்குவதாக படக்குழு சார்பாக ராமதாஸ் பூஜாரி தெரிவித்துள்ளார். தற்போது நான்காவது முறையக காந்தாரா படத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதால் இந்த அமானுஷ்யங்கள் மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது

மிகப்பெரிய பட்ஜெட்டில் சவாலான லொக்கேஷன்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி இந்த மாதிரியான விபத்துகள் ஏற்பட செய்கின்றன. ஆனால் அதனை தெய்வ செயல்பாடுகள் என்கிற நம்பிக்கை படக்குழு படத்தின் பப்ளிசிட்டிகாக ஊக்குவிக்கிறதா என்கிற கேள்வியை ரசிகர்கள் வைத்துள்ளார்கள்.