குடும்பத்தினரால் நிச்சயிக்கப் பட்டு கோலாகலமாக நடந்து முடிந்த இந்த திருமண தம்பதிகளுக்கு தமிழ் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


ரோபோ சங்கர் 


விஜய் தொலைக்காட்சியில் மிமிக்ரி செய்து பிரபலமானவர் ரோபோ சங்கர். தனுஷ் நடித்த மாரி படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார். தொடர்ச்சியாக பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தார்.இடையில் உடல் நல குறைவு காரணமாக உடல் எடை மெலிந்து ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி இருந்தார் நடிகர் ரோபோ சங்கர். மனைவி மற்றும் மகளின் அன்பும் அரவணைப்பும் சேர்ந்து அவரை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தது. இந்நிலையில் அவரின் உடல்நிலை தேறிய பிறகு மகள் இந்திரஜா சங்கரின் திருமண ஏற்பாடுகளை மும்மரமாக செய்து முடித்திருக்கிறார் ரோபோ சங்கர். 


மகள் இந்திரஜா  திருமணம்


ரோபோ சங்கர் பிரியங்கா தம்பதியின்  மகளான இந்திரஜா சங்கர் விஜய் நடித்த பிகில் படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார்.  அதைத் தொடர்ந்து கார்த்தியின் 'விருமன்' படத்திலும் நடித்திருந்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சர்வைவர்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார் இந்திரஜா  சங்கர் . ரோபோ சங்கரின் உறவினர் மற்றும்  இயக்குநர் கார்த்திக் மற்றும் இந்திரஜா  ஆகிய இருவருக்கும் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி வீட்டில் தங்களது குடும்பத்தினர் மத்தியில்   திருமணம் நிச்சயிக்கப் பட்டது. நிச்சயத்தைத் தொடர்ந்து தங்களது திருமண தேதியை இந்திரஜா மற்றும் கார்த்திக் இருவரும் சேர்ந்து அறிவித்தார்கள். மேலும் தங்கள் திருமணத்திற்கான முதல் பத்திரிக்கையை தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்களுக்கு வழங்குவதாக அவர்கள் இந்த அறிவிப்பு வீடியோவில் தெரிவித்தார்கள்.  இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் மற்றும் ஹல்தி நிகழ்ச்சி பல்வேறு சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு கோலாகலமாக கொண்டாடினார்கள்.  ஒரு பக்கம் இயக்குநராக இருக்கும் கார்த்திக் மறுபக்கம் தொடர்வோம் என்கிற தன்னார்வலத் தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 






குடும்பத்தினரால் நிச்சயிக்கப் பட்ட இந்த தம்பதியினரின் திருமணம் இன்று மதுரையில் நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு சின்னத் திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 




மேலும் படிக்க :


Genie First Look: அற்புத விளக்கில் இருந்து ஜீனியாக வந்த ஜெயம் ரவி! ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!