பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விஜய் நடிப்பில் தயாராகிவரும் அடுத்த படம் பிஸ்ட். இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படம் வரும் 2022ஆம் ஆண்டு தை பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் பிஸ்ட் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகள் இணையதளத்தில் கசிந்துள்ளன. அதாவது பீஸ்ட் திரைப்பட காட்சி என்று வெளியாகியுள்ள இந்த 38 விநாடிகள் கொண்ட வீடியோவில் ஒரு ஷாப்பிங் மாலில் இருந்து நடிகர் விஜய் ரத்த கறையுடன் நடந்துவருவதுபோல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் அவர் இந்தக் காட்சியில் ஒரு வெள்ளை நிற சட்டையை அணிந்துள்ளார். இது படத்தில் அமைந்துள்ள ஒரு சண்டை காட்சியில் வரும் என்று சிலர் கூறி வருகின்றனர். இந்த வீடியோ லீக்கானது படக்குழுவினரை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 




இந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என்று நடிகர் விஜயின் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. எனினும் ஒரு சிலர் இந்த வீடியோவை வேகமாக பரப்பி வருகின்றனர். நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் காட்சிகள் லீக்காவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பாக சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் காட்சிகளும் வெளியாவதற்கு முன்பாக ஒரு சில காட்சிகள் வெளியாகின. மேலும் அந்தப் படத்தின் ஒரு மணிநேர வீடியோவும் அப்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை தந்தது குறிப்பிடத்தக்கது. 


இந்தச் சூழலில் தற்போது மீண்டும் நடிகர் விஜயின் திரைப்படம் ஒன்றின் காட்சிகள் லீக்காகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சிகள் எப்படி கசிந்தது என்பது தொடர்பாக படக்குழுவினர் தீவிரமாக விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் விஜய் படத்திற்கு மட்டுமே ஏன் அடிக்கடி நடக்கிறது என்று ஒரு சிலர் கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கலாமா என்று படக்குழுவினர் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: தியேட்டர் திறந்தாலும் வரிசைகட்டும் ஓடிடி தமிழ் படங்கள்.. என்ஜாய் : முழு விவரம் இதோ!