நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் இடம் பெற்றுள்ள நடிகர் அர்ஜூனின் கேரக்டரின் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


எதிர்பார்ப்பில் லியோ படம் 


நடிகர் விஜய் உடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 2வது முறையாக லியோ படத்தில் இணைந்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் லியோ படத்தில் சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராஜ் காஷ்யப், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படம் அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கும் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


48 Years Of RAJINISM: ‘தலைவரு நிரந்தரம்’ .. சினிமாவில் 48 ஆண்டுகளை நிறைவு செய்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்..!


விறுவிறுப்பாக நடக்கும் பணிகள் 


லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்ற நிலையில் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் ஜூலை 14 ஆம் தேதி முடிந்தது.  கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. தொடர்ந்து அன்று காலை செகண்ட் லுக் போஸ்டரும், மாலையில்  ‘நா ரெடி’ பாடலும் வெளியானது. நடிகர் விஜய் பாடிய இந்த பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 


இதனிடையே இன்னும் 2 மாத காலம் மட்டுமே உள்ளதால் லியோ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தில் நடித்துள்ள பிரபலங்கள் தங்களுடைய நேர்காணலில் லியோ படம் குறித்த அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றனர். 


வெளியான புதிய அப்டேட் 


கடந்த ஜூலை 29 ஆம் தேதி நடிகர் சஞ்சய் தத் தனது 64வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு படத்தில் இடம் பெற்ற அவரது கேரக்டரான ”ஆண்டனி தாஸ்” கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. இந்நிலையில் இன்றைய தினம் நடிகர் அர்ஜூன் தனது 61வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை சிறப்பிக்கும் வகையில் லியோ படத்தில் அவரது கேரக்டரான “ஹரால்ட் தாஸ்” கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. 


இதில் கார் ஒன்றில் மிகவும் மிரட்டலாக வரும் அர்ஜூன் சாண்டி மாஸ்டர் கையை வெட்டுவது போலவும், அடுத்த காட்சியில் சிகரெட்டுடன் இருப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அர்ஜூனின் ட்ரேட் மார்க் டயலாக் ஆன “தேரிகே”-வும் இதில் வைக்கப்பட்டுள்ளது.