நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் 'தி கோட்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார். 


எகிறும் எதிர்பார்ப்பு!


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மூலம் அரசியலில் சமீபத்தில் தடம்பதித்துள்ள நிலையில், அவரது ஒவ்வொரு செயலும் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனமீர்த்து வருகிறது. தற்போது ‘தி கோட்’ திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், இன்னும் தான் கமிட்டாகியுள்ள ஒரு படமான ‘தளபதி 69’ படத்துடன் சினிமாவில் இருந்து விலகுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் அவரது கடைசி இரண்டு திரைப்படங்களையும் பெரிதும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.


இதனிடையே இரண்டு நாள்களுக்கு முன்னதாக ‘தி கோட்’ படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் படக்குழுவினருடன் ரஷ்யா சென்றடைந்தார். இந்த மாதம் தொடங்கி ‘தி கோட்’ படத்தின் அப்டேட்கள் வரிசையாக வெளியாகும் என ஏற்கெனவே வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இந்நிலையில், விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ‘தி கோட்’ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து விஜய்யின் க்யூட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


விஜய்யின் க்யூட் வீடியோ!


ரஷ்யாவில் தி கோட் பட கெட் அப்பில் ஃப்ரீஸ்டைல் ஸ்கூட்டர் ஓட்டியபடி விஜய் ஜாலியாகப் பயணிக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் தற்போது வைரலாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.


 






வெங்கட் பிரபுவுடன் முதன்முறையாக விஜய் கூட்டணி வைத்துள்ள தி கோட் திரைப்படத்தினை மல்ட்டி ஸ்டாரர் திரைப்படமாக பெரும் பட்ஜெட்டில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.


நட்சத்திரப் பட்டாளம்


சென்னை, ஹைதராபாத், இலங்கை, தாய்லாந்து, இஸ்தான்புல், மாஸ்கோ, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தி கோட் படத்தின் படப்பிடிப்பு முன்னதாக நடைபெற்றுள்ளது. நடிகர்கள் பிரபுதேவா, பிரஷாந்த், மோகன், நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, நடிகர்கள் வைபவ், பிரேம் ஜி, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் கதை டைம் ட்ராவலை மையப்படுத்தி அமைந்திருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


யுவன் ஷங்கர் ராஜா புதிய கீதை திரைப்படத்துக்குப் பிறகு பல ஆண்டுகளுக்குப் பின் நடிகர் விஜய் உடன் இணைந்துள்ளது இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் நடிகை த்ரிஷா தி கோட் படத்தில் பாடல் ஒன்றுக்காக நடனமாட உள்ளதாகவும் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் முன்னதாக வெளியான தகவலும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் படிக்க: Vijay - Saibaba Temple: அம்மாவுக்காக சாய்பாபா கோயில் கட்டிக்கொடுத்த நடிகர் விஜய்.. சில சுவாரஸ்யங்கள்..


TN BJP: பாஜகவில் இணைந்த பிரபல சினிமா தம்பதியினர்.. ஆச்சரியத்தில் கோலிவுட்!