தன் தாய்க்காக நடிகர் விஜய் (Vijay) சென்னையில் 8 கிரவுண்ட் நிலத்தில் சாய் பாபா கோயில் (Saibaba Temple) கட்டிக் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


சினிமா டூ அரசியல் பயணம்


‘தி கோட்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடிகர் விஜய் தற்போது முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் தொடங்கி இப்படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வரும் என ஏற்கெனவே இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளது விஜய் ரசிகர்களை எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.


மற்றொருபுறம், தன் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மூலம் அரசியலில் சில மாதங்களுக்கு முன் தடம்பதித்த விஜய், இன்னும் தான் கமிட்டாகியுள்ள தளபதி 69 திரைப்படத்தினை மட்டும் முடித்து விட்டு சினிமாவில் இருந்து விலகி முழு நேரம் அரசியலில் ஈடுபடுவார் எனக் கூறப்படுகிறது. இதனால் சினிமா, அரசியல் என இரு வட்டாரங்களிலும் விஜய்யின் அனைத்து நடவடிக்கைகளும் கவனமீர்த்து வருகின்றன.


தாய்க்காக சாய் பாபா கோயில் கட்டிக்கொடுத்த விஜய்


இந்நிலையில், நேற்று நடிகர் விஜய் சாய் பாபா கோயிலுக்கு வருகை தந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்தப் புகைப்படத்தினை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன் இணைய பக்கத்தில் பகிர்ந்த நிலையில், இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளியது. 


விஜய் சென்னையில் உள்ள சாய் பாபா கோயிலில் தரிசனம் செய்தாரா, எந்தக் கிளையில் தரிசனம் செய்தார், கிறிஸ்தவரான விஜய் சாய் பாபா பக்தரா என்றெல்லாம் பல கேள்விகளும் விவாதங்களும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன. இந்நிலையில், தற்போது இது குறித்த ஆச்சர்யத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 


8 கிரவுண்ட் நிலம்


அதன்படி, நடிகர் விஜய் தீவிர சாய்பாபா பக்தையான தன் தாய் ஷோபாவுக்காக புதிதாக இந்த சாய்பாபா கோயிலை தானே கட்டிக்கொடுத்துள்ளார் எனும் சர்ப்ரைஸ் தகவல் வெளியாகியுள்ளது. 


சென்னை, கொரட்டூரில், 8 கிரவுண்ட் நிலத்தில் விஜய் இந்த சாய் பாபா கோயிலை கட்டிக் கொடுத்துள்ளார் என்றும், இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த ஃபிப்ரவரி மாதம் 10ஆம் தேதியே நடைபெற்று முடிந்தது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பணிகளின் போது ஷோபா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் பங்கேற்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.




மேலும் இந்தக் கோயில் கட்டுமானப் பணிகளின்போது நடிகர் விஜய் அவ்வப்போது வந்து கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தன் தாய்க்காக கோயில் கட்டிக் கொடுத்துள்ள நடிகர் விஜய்யை ரசிகர்கள் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.


மேலும் படிக்க: MCU Iron Man: “நான் ரெடிதான்” - மீண்டும் அயர்ன் மேன்.. ஓகே சொன்ன ராபர்ட் டவுனி ஜுனியர் - ரசிகர்கள் ஹேப்பி


TN BJP: பாஜகவில் இணைந்த பிரபல சினிமா தம்பதியினர்.. ஆச்சரியத்தில் கோலிவுட்!