தமிழ்நாட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் தற்போது பீஸ்ட் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில், நாளை வெளியாக உள்ள அரபிக்குத்து பாடலுக்கான போஸ்டரை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிவுபெற்று தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடல் பிப்ரவரி 14-ந் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் ஆகிய மூன்று பேரின் ரகளையில் வெளியான வீடியோ ரசிகர்கள் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த வீடியோவில் நடிகர் விஜய் தொலைபேசி மூலமாக பேசுவதும் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், முதல் பாடலுக்கான போஸ்டர் இன்று வெளியாகியிருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. காதலர் தினமான நாளை அரபிக்குத்து பாடல் வெளியாகிறது. இந்த பாடலில் நடிகர் விஜய் சிறப்பான நடனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பிரபல இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகிபாபு, வி.டி.வி. கணேஷ், ரெடின் கிங்ஸ்லி நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், அபர்ணா தாஸ், ஜான் விஜய், டான்சிங் ரோஸ் புகழ் நடிகர் உள்பட ஏராளமான பட்டாளமே நடித்துள்ளனர்.
மேலும் படிக்க : Actress Reshma Viral Pic : புஷ்பா புருஷன் காமெடி நடிகையா இது...! எப்படி, எங்க டாட்டூ குத்திருக்காங்கனு பாருங்க...!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்