விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருப்பார். இப்படத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் நல்ல ஹிட் அடித்தது. திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே குட்டி ஸ்டோரி மற்றும் வாத்தி கம்மிங் பெரியளவில் ஹிட் அடித்தது. இத்திரைப்படம் வெளியான பின்பு வாத்தி கம்மிங் பாடல் மிகவும் வைரலானது. பல தரப்பட்ட மக்களையும் இந்தப் பாடல் சென்றடைந்தது.
குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலர் மத்தியில் இந்தப் பாடல் மிகவும் பிரபலம் அடைந்தது. பல திருமணங்களில் கூட இந்தப் பாடல்தான் எப்போதும் ஒலிக்கும் வகையில் அமைந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார்கள். இவர்கள் தவிர ஷில்பா செட்டி உள்ளிட்ட சில பாலிவுட் நட்சத்திரங்களும் இந்தப் பாடலுக்கு ஒரு கவர் பெர்ஃபாமன்ஸ் செய்திருப்பார்கள்.
இந்நிலையில் தற்போது யூடியூப் தளத்தில் வாத்தி கம்மிங் பாடலை இதுவரை 225 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த அளவிற்கு பார்வையாளர்களை ஈர்த்து இந்தாண்டு வெளிவந்த பாடல்களில் அதிகம் பேர் பார்த்த பாடல் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. இது தொடர்பாக தற்போது ட்விட்டர் தளத்தில் "#VaathiComing"என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அதில் பலரும் இந்தப் பாடல் 225 மில்லியன் வியூஸ் சென்றது தொடர்பாக பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இவ்வாறு பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: கோலிவுட்டில் யாரும் படைக்காத புதிய சாதனை.. ட்விட்டரில் வைரலாகும் தனுஷ் !