Suriya with Sachin: கூல் சச்சினுடன் க்யூட் சூர்யா... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

சூர்யாவும் சச்சினும் கூலாக மகிழ்ச்சியுடன் போஸ் கொடுக்கும் இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Continues below advertisement

நடிகர் சூர்யாவும் இந்தியக் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் நேரில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.

Continues below advertisement

சச்சின் - சூர்யா காம்போ!

சூர்யாவும் சச்சினும் மும்பையில் சந்தித்துக் கொண்டதாகக் கூறப்படும் நிலையில், இருவரும் கூலாக போஸ் கொடுக்கும் இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும், சூர்யா - சச்சினின் இந்த சந்திப்பு திட்டமிடாமல் நிகழ்ந்த சந்திப்பு தான் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


முன்னதாக இதேபோல் சச்சினை அவரது இல்லத்தில் சந்தித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. கரியர் தொடக்கம் தொடங்கி ஏராளமான ஒற்றுமைகளுடன் நல்ல நண்பர்களாக வலம் வரும் இருவரது புகைப்படமும் அவர்களது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.


மேலும் ஏ.ஆர்.ரஹ்மானை இசைப்புயல் என தமிழில் குறிப்பிட்டு சச்சின் மகிழ்ச்சியாக இப்படத்தை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

சூர்யா 42

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் தற்போது நடிகர் சூர்யா பிஸியாகப் பணியாற்றி வருகிறார். பாலிவுட் நடிகை திஷா பத்தானி முதன்முறையாக சூர்யாவுடன் இப்படத்தில் ஜோடி சேரும் நிலையில், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இப்படத்தின் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் செய்திராத வகையில், 13 கதாபாத்திரங்களில் சூர்யா நடித்து அசத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் வரலாற்றுக் கதையாக இப்படம் உருவாகி வருவதாகவும், அரத்தர், முக்காட்டார்,  வெண்காட்டார், பெருமனத்தார்  மண்டாங்கர் என சூர்யா மொத்தம் 5 கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மெகா பட்ஜட்டில் முழுவீச்சில் உருவாகி வரும்  இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். மொத்தம் 10 மொழிகளில் 3டி படமாக இப்படம் உருவாகி வருகிறது. வரும் ஏப்ரல் மாதத்தில் இப்படத்தை முடிக்க படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தப் படத்தின் ஹிந்தி உரிமையை ஏற்கெனவே தயாரிப்பாளர் ஜெயந்திலால் கடா 100 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  


முன்னதாக இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனமீர்த்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். முன்னதாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குநர் சிவாவைப் பாராட்டியதுடன், 2 வெவ்வேறு காலக்கட்டத்தில்  இப்படத்தின் கதை நடைபெறுவதாகத் தெரிவித்திருந்தார்.

மேலும் சமீப காலமாக சூர்யா 42 ஹேர்கட்டில் நடிகர் சூர்யா பொது நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் காட்சிகளும் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றன.

மேலும் படிக்க: காருக்குள் லிப் கிஸ் கொடுத்த பிரபல நடிகை... வைரலான வீடியோ.. உள்ளே இருந்தது யார் என கேள்வியெழுப்பும் ரசிகர்கள்..!

Continues below advertisement
Sponsored Links by Taboola