திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை பூமி பெட்னேகர் காரில் லிப் கிஸ் கொடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 


கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான தம் லகா கே ஹைசா படத்தின் மூலம் ஹீரோயினாக பாலிவுட்டில் அறிமுகமானவர் பூமி பெட்னேகர். மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சோன்சரியா படத்திலும் இவர் தான் ஹீரோயினாக நடித்திருந்தார்.


தொடந்து ஆந்தாலஜி படமான லஸ்ட் ஸ்டோரீஸில் செம துணிச்சலான நடிப்பை வெளியிட்டு பாலிவுட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற அவர், படு கவர்ச்சியாக கடந்தாண்டு வெளியான கோவிந்த் நாம் மெரா படத்தில் நடித்திருந்தார். இதனால் பாலிவுட் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக பூமி பெட்னேகர் வலம் வருகிறார். 






இதனிடையே கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி நடிகை கியாரா அத்வானியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட்டைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். அதில் பூமி பெட்னேகரும் ஒருவர். அவர் அணிந்து வந்த உடை அனைவரையும் கவர்ந்த நிலையில் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. ஆனால் நிகழ்ச்சி முடிந்து பூமி பெட்னேகர் செய்த செயல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


அவர் காரில் ஏறுவதை ஒரு கூட்டம் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் காரில் ஏறிய பூமி பெட்னேகர் சட்டென்று உள்ளே இருந்த நபருக்கு லிப் கிஸ் கொடுத்தார். இவை அனைத்தும் வீடியோவில் பதிவானது இணையத்தில் வைரலானது. பூமியுடன் இருக்கும் நபர் யார் என்ற கேள்வி தான் இணையத்தில் வைரலாக வருகிறது. 


பூமி பெட்னேகர் பிரபல தொழிலதிபரான யஷ் கட்டாரியா என்பவரை காதலித்து வருவதாகவும், அவருடன்தான்  காருக்குள் முத்த மழை பொழிந்துள்ளார் என்றும் பாலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.