மறைந்த பிரபல இயக்குநர் சித்திக் வீட்டுக்கு நேரில் சென்ற சூர்யா, அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். 


தமிழ் திரையுலகில் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நகைச்சுவை படங்க தான் ப்ரண்ட்ஸ், எங்கள் அண்ணா. நகைச்சுவையில் கொண்டாடப்படும் இந்தப் படங்களுக்கு என்றுமே ரசிகர்கள் ஏராளம். ப்ரண்ட்ஸில் வரும் காண்ட்ராக்டர் நேசமணி கேரக்டர் இல்லாத மீம்ஸ் இல்லை என்றே கூறலாம்.


இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகக் கொண்டாடப்படும் நகைச்சுவை படத்தை கொடுத்த சித்திக் கடந்த 8-ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். 


மலையாளம் மட்டுமின்றி  தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் படங்களை இயக்கி தனக்கென தனி முத்திரையை பதித்து கொண்ட சித்திக், இறுதியாக, மலையாள ஸ்டார் மோகன் லாலை வைத்து பிக் பிரதர் என்ற படத்தை இயக்கி இருந்தார்.


இந்தப் படத்துக்குப் பிறகு நிமோனியா மற்றும் கல்லீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட சித்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நலம் தேறி வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சித்திக் உயிரிழந்ததார். 


அவரது மறைவுக்கு மலையாளம், தமிழ் என திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர். மம்மூட்டி, ஃபகத் பாசில், துல்கர் சல்மான், நடிகர் லால் உள்ளிட்டோர் நேரில் சென்று சித்திக் உடலுக்கு மரியாதை செலுத்தினர். திரைப் பிரபலங்கள் ட்விட்டர் பதிவு மூலம் இரங்கல் பதிவிட்டனர். சித்திக் இயக்கத்தில் ஃப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த சூர்யாவும் இரங்கல் செய்தியை வெளியிட்டு இருந்தார். 


இந்த நிலையில் கேரளாவின் கொச்சியில் உள்ள சித்திக் வீட்டிற்கு நேரில் சென்ற சூர்யா அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். சித்திக் வீட்டில் இருக்கும் அவரது புகைப்படங்களை சூர்யா பார்வையிடும் காட்சி டிவிட்டரில் பகிரப்பட்டு வருகிறது. சித்திக்கை இழந்து வாடும் நிலையில் தங்களை வந்து சூர்யா சந்தித்தது ஆறுதலாக இருப்பதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர். 






கேரளாவில் பிரபலமான கொச்சி கலாபவன் கலை குழுவில் மிமிக்ரி கலைஞராக இருந்த சித்திக், 1986ஆம் ஆண்டு ‘பப்பன் பிரியப்பட்ட பப்பன்’ என்ற மலையாள படத்திற்கு கதை எழுதினார். அதைத் தொடர்ந்து மோகன்லால் நடித்த நாடோடிக்காட்டு படத்தை நடிகர் லாலுடன் இணைந்து இயக்கினார்.


மலையாளத்தில் அனைவருக்கும் பிடித்த இயக்குநராக வலம் வந்த சித்திக், 1999ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ப்ரண்ட்ஸ் படத்தை இயக்கினார். சூர்யா, விஜய், வடிவேலு, ரமேஷ் கண்ணா நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. இந்தப் படத்தில் விஜய், சூர்யா இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைத்ததுடன், இருவருக்கும் சரிசமமாக முக்கியத்துவம் கொடுத்து படத்தை வெற்றிபெறச் செய்திருந்தார் சித்திக். 


சித்திக் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் திரைக்கு எங்கள் அண்ணா, சாது மிரண்டால், காவலன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றன. 


மேலும் படிக்க: Actress Sridevi: 'இந்திய சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார்’ .. நடிகை ஸ்ரீதேவி பிறந்த தினம் இன்று..!