இரு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சிகள் ஒரே கூட்டணியில் இருப்பதால் மோதல் வரட்டும் என்றே காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டியுள்ளார். 

 

கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு ( k balakrishnan ) 

 

செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில், அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநில குழு கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

 

சாதிய ஆணவம் தலைவிரித்து ஆடுவது

 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாலகிருஷ்ணன், தமிழ்நாட்டில் சாதிய ஆணவம் தலைவிரித்து ஆடுவது வேதனையை அளிக்கிறது. தமிழ்நாடு சாதிய ஆதிக்க மனோபாவம் கொண்ட மாநிலமாக மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாகரீக உலகத்தில் இது போன்ற சம்பவங்களை, அனுமதிக்க கூடாது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்பாதி கோவில் பிரச்சினை மற்றும் வேங்கை வயல் மலம் கலந்த பிரச்சினை ஆகியவற்றுக்கு, உடனடி தீர்வு கிடைக்காததால், இதுபோன்று செயல்படுபவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது. எனவே அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.



 


 

மோதல் வரட்டும் என்றே  

 

காவேரி மேலாண்மை ஆணையம், விஷயத்தில் கர்நாடக அரசு செய்வது தவறு. நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய தண்ணீர் கொடுத்தாக வேண்டும். காவேரி மேலாண்மை ஆணையம் அரசியல் மயமாகி விட்டது. இரு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருப்பதால் மோதல் வரட்டும் என்றே காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இது தமிழகத்தை வஞ்சிக்கக்கூடிய செயல்.

 

அவருக்கு என்ன பிரச்சனை

 

ஆளுநர் ரவி மனதில் பட்டதை எல்லாம் பேசி வருகிறார். இது அவருக்கு தேவையில்லாத ஒன்று. ஆளுநர் ரவி அரசியல்வாதி போல் பேசி வருகிறார்.  அதை எப்படி அனுமதிக்க முடியும். கிரிவல பாதையில் அசைவ உணவகங்கள் இருந்தால் அவருக்கு என்ன பிரச்சனை. கிரிவலை பாதை தான் திருவண்ணாமலை நகரமே அப்படி என்றால், திருவண்ணாமலையில் அசைவம் இருக்கக் கூடாது என கூறுகிறாரா ? என கேள்வி எழுப்பினார்.