Actor Soori : சூரி நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை மற்றும் விடுதலை ஆகிய இரண்டு படங்கள் சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ளன.


சூரி


தமிழ் சினிமாவில்  நகைச்சுவை நடிகராக இருந்து, பின் ஒரு படத்தை தனது தோளில் மொத்தமாக தாங்கும் அளவிற்கு பெரிய நடிகராக உருவாகி வருகிறார் நடிகர் சூரி. வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் தொடங்கிய இவரது இந்த புதிய பயணம் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி  நகர்கிறது. கூழாங்கல் இயக்குநர் பி.எஸ் வினோத் ராஜ் இயக்கியிருக்கும் கொட்டுக்காளி படத்தில்  ஒரு புதிய அவதாரத்தில்  தோன்ற இருக்கிறார். இதனைத் தொடர்ந்து நிவின் பாலி நடித்து ராம் இயக்கியிருக்கும் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார்.


அடுத்தபடியாக துரை செந்தில் குமார் இயக்கும் கருடன் படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் எழுதிய கதையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியானது. 


நெதர்லாந்து சென்ற சூரி






தற்போது சூரி நெதர்லாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் நடித்துள்ள விடுதலை மற்றும் ஏழு கடல் ஏழு மலை ஆகிய இரு படங்கள் சர்வதேச ரோட்டர்ட்டாம் திரைப்பட விழாவில் திரையிடப் பட இருப்பதால் இந்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.


கருடன்






எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் கவனமீர்த்தவர் துரை செந்தில் குமார். இவரது இயக்கத்தில், சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் கருடன். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சொக்கன் என்கிற கதாபாத்திரத்தில் இப்படத்தில் சூரி நடித்துள்ளார்.


மேலும் சூரி வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடித்திருக்கும் கொட்டுக்காளி படமும் சர்வதேச திரைப்பட விழாக்களில் பெரிய அங்கீகாரத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொட்டுக்காளி படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க : Sarpatta 2: நீயே ஒளி, நீதான் வழி.. சார்பட்டா 2ஆம் பாகத்துக்காக வெறித்தனமாக பயிற்சி எடுக்கும் ஆர்யா!


அனிமல் படத்துல நான் நடிச்சிருந்தா இதை செஞ்சிருப்பேன்.. நானி சொன்ன பதில்..