தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் சிம்பு. மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் சிம்பு பல படங்களில் தொடர்ந்து ஒப்பந்தம் ஆகி வருகிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் மிகவும் மாறுபட்ட நடிப்பில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில், இந்த படத்தின் மறக்குமா நெஞ்சம் பாடல் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, சற்றுமுன் மறக்குமா நெஞ்சம் என்ற மெல்லிசை பாடல் யூ டியூப்பில் வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை அளித்து வருகின்றனர்.



VTK 2nd Song : மனதை வருடும் 'மறக்குமா நெஞ்சம்...!' வெந்து தணிந்தது காடு படத்தின் 2வது பாடல் ரிலீஸ்...!


வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது.






இந்த நிலையில், தாமரை எழுதிய மறக்குமா நெஞ்சம் என்ற பாடல் 4.37 நொடிகள் இடம்பெற்றுள்ளது. கவுதம் மேனன் – சிம்பு மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் என்பதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியாகிய விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.




இதன் காரணமாகவே இவர்கள் இணைந்துள்ள வெந்து தணிந்தது காடு படமும் அதே வரிசையில் அமையும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தன்னுடைய படங்களில் நடிக்கும் கதாபாத்திரங்களை மிகவும் ஸ்டைலிஷான நபர்களாகவே காட்டி வந்த கவுதம்மேனன் முதன் முறையாக ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞரின் கதையாக வெந்து தணிந்தது காடை இயக்கியிருப்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்ததற்கு முக்கிய காரணமாக உள்ளது.


மேலும் படிக்க : கதை சொல்லிவிட்டு நடிக்கவே கூப்பிடாத முத்தையா... வடிவுக்கரசி சொன்ன தகவல்


மேலும் படிக்க : Patriotic Songs Tamil: வந்தே மாதரம்... தாயின் மணிக்கொடி...தேசப்பற்றுக்கான டாப்-10 தமிழ் பாடல்கள்..!




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர