நிஜ வாழ்க்கையில் நடைபெறும் பல்வேறு திருட்டு சம்பவங்கள், கொலை சம்பவங்கள் படங்களில் வரும் நகைச்சுவை காட்சிகளை போலவே இருக்கும். அதேபோல. தற்போது சென்னை, திருமங்கலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.


சென்னை, திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன். அவருக்கு வயது 51. இவர் பழைய கார்களை விற்கும் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவரது கார் விற்பனை நிலையம் பாடி மேம்பாலம் அருகே அமைந்துள்ளது. வழக்கமாக கார்களை வாங்க வருபவர்கள் அதை ஒரு முறை டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பது வழக்கம்.


இந்த நிலையில், நேற்று சவுந்திரபாண்டியன் கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் வந்துள்ளார். அவர் தன்னுடைய பெயர் முருகன் என்றும், தனக்கு கார் ஒன்று வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், அவர் வழக்கறிஞராக பணியாற்றுவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, அங்கிருந்த பழைய கார் ஒன்றை அவர் ஓட்டிப்பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.




இதையடுத்து, அவருடன் கடையில் பணியாற்றும் தனிஷ் என்ற நபரை சவுந்திரபாண்டியன் டெஸ்ட் டிரைவுக்கு அனுப்பியுள்ளார். அந்த பழைய காரை ஓட்டிப்பார்த்த முருகன் கடைக்கு திரும்பியுள்ளார். பின்னர், தனக்கு அங்கிருந்த ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள ஜீப் ஒன்றை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


சவுந்திரபாண்டியனும் அவருடன் தனிஷை அனுப்பியுள்ளார். அந்த நபரும் கடையில் பணியாற்றும் தனிஷை அழைத்துக்கொண்டு ஜீப்பை சிறிது தூரம் ஓட்டிச்சென்றுள்ளார். பின்னர், சிறிது தூரம் சென்ற பிறகு ஜீப்பை நிறுத்தி தனிஷை கீழே இறங்க கூறியுள்ளார். தனிஷை சாமர்த்தியமாக கீழே இறக்கிவிட்ட அந்த நபர், தனிஷ் கவனத்தை திசைதிருப்பிவிட்டு ஜீப்பை திருடிச்சென்றார்.


மேலும் படிக்க : பட்டம் பறக்குது பட்டம்! டிசைன் டிசைனாக பட்டங்கள்! தமிழகத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா!


இதனால், பதறிப்போன தனிஷ் தனது உரிமையாளர் சவுந்திரபாண்டியனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர்கள் ஜீப்பை தேடிப்பார்த்தும் ஜீப் கிடைக்கவில்லை. இதையடுத்து, திருமங்கலம் காவல்நிலையத்தில் ஜீப்பைத் திருடிச்சென்ற ஆசாமி மீது சவுந்திரபாண்டியன் புகார் அளித்தார்.




நடிகர் அருண்விஜய் நடித்த ஜனனம் என்ற திரைப்படத்தில், நடிகர் வடிவேலு  பழைய மொபைட்டை விற்பனை செய்ய தயாராக இருப்பார். அவரிடம் இருவர் மொபைட்டை பணத்தை கொடுத்துவிட்டு ஓட்டிப்பார்க்கிறோம் என்று கூறுவார்கள். ஆனால், மொபைட்டை ஓட்டிப்பார்த்துவிட்டு பணத்தை வாங்கிக்கொள்வதாக கூறுவார்கள். பின்னர், அவர்கள் மொபைட்டை திருடிக்கொண்டு தப்பிச்சென்று விடுவார்கள். இந்த நகைச்சுவை காட்சியை போலவே தற்போது திருமங்கலத்திலும் அரங்கேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : சென்னை வங்கி கொள்ளையில் திடுக் ட்விஸ்ட்! ஊழியரே ஸ்கெட்ச் போட்டு கொள்ளை - விசாரணை தீவிரம்!


மேலும் படிக்க : சென்னை: வங்கிக்குள் துப்பாக்கியுடன் புகுந்த கும்பல்! ரூ.20கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண