'மல்லிப்பூ' பாடலின் மேக்கிங் வீடியோவை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டு இருக்கிறார். 


அனைவராலும் கொண்டாடப்பட்ட  ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்ற  ‘மல்லிப்பூ’ பாடலின் மேக்கிங் வீடியோவை நடிகர் சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.






இந்த ஆண்டின் இரண்டாம் பாகத்தில், மேகம் கருக்காதா, தேன் மொழி ஆகிய பாடல்களை கேட்டு மகிழ்ந்த மக்கள், மல்லிப்பூ பாடலையும் கேட்டு மகிழ்ந்தனர். படம் வெளியான போது, ‘மல்லி பூ’ பாடல்தான் நல்லா இருக்கு அந்த பாட்டுக்காகதான் நான் படத்தை பார்த்தேன் என்று சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். 


முன்பு, மறக்குமா நெஞ்சம் பாடல் ட்ரெண்டாகி இருந்தது. அதற்கும் டஃப் கொடுக்கும் வகையில், மதுஸ்ரீ குரலில் மல்லி பூ பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவி வைரலானது. வெளியூரில் வேலை புரியும் கணவர்களை பிரிந்து வாடும் மனைவிகளுக்கு ஏற்ற பாடலாக இது அமைந்து இருக்கிறது. 


இப்பாடல் திரையரங்குகளில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சில நாட்களுக்கு முன்பு யூடியூப் பக்கத்தில் இப்பாடலின் வீடியோ வெளியானது. அந்த பாடலில், ஒருவர் அவர் மனைவியிடம் ஏன் மல்லிப்பூ வைக்கவில்லை என கேட்க, அவர் மனைவி இப்பாடலை பாட துவங்கிவிடுவார். அந்த பாட்டை மொபைல் போனில் கேட்டு, அங்குள்ள ஆண்கள் ஆட தொடங்கி விடுவர். இதில் லாஜிக்கே இல்லை, எப்படி செல்போன் காலில் இப்படி தெளிவான ஒலி கேட்கும் என்று சில மக்கள் புலம்பி தள்ளினர்.






ஆனால், இந்த லாஜிக் இல்லாத காட்சிக்கு உயிர் ஓட்டத்தை கொடுப்பதே சிம்புவின் இயல்பான க்யூட் நடனம்தான். இந்த பாடலை ஒரே டேக்கில் எடுத்தோம் என ப்ரிந்தா மாஸ்டர் முன்பாக தெரிவித்தார் என்பது குறிப்பிடதக்கது. முன்னதாக, பாடல் ஆசிரியை தாமரை, “ முழுக்க முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல் ! விரைவாக எழுதி விட்டேன். நாட்டுப்புறப் பாடல்கள் நான் எழுத மாட்டேன் எனப் பலரும் நினைத்திருப்பதால் பாடல் பதிவின் போது புன்னகைத்துக் கொண்டேன்.” என்று தனது கருத்துக்களை பதிவிட்டார்.


தற்போது, மல்லிப்பூ பாடல் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வியூஸ்களை பெற்று, நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.


மேலும் படிக்க : Rajinikanth Pic: “குறையற்ற தந்தை அன்பு”.. மகள் வெளியிட்ட மாஸ் ரஜினி.. வைரலாகும் புகைப்படம்!