சித்தா திரைப்படத்தின் மிகப்பெரும் வெற்றிக்குப் பிறகு நல்ல கதையம்சமுள்ள தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வரும் சித்தார்த், அடுத்ததாக ‘மிஸ் யூ’ என்ற காதல் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.


புதுமுக நடிகையுடன் ஜோடி சேரும் சித்தார்த்


இப்படத்தில் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பிரபலமான நடிகை ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘மாப்ள சிங்கம்’ மற்றும் ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படங்களின் இயக்குநர் N.ராஜசேகர் இயக்கியுள்ள இப்படம் காதல், ஆக்சன், காமடி என முழுநீள பொழுதுப்போக்கு படமாகத் தயாராகியுள்ளது. பிராண்டிங் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் தமிழ்நாட்டில் முன்னோடியாகத் திகழும் '7 miles per second' நிறுவனத்தின் சார்பில் சாமுவேல் மேத்யூ இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். 


ஜே.பி, பொன்வண்ணன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா என பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கும் நிலையில், ஹீரோ, ஹீரோயினுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இல்லாமல், நகைச்சுவை மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இப்படம் கலகலப்பாக இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


காதல் படம்


பின்னணி இசைக்கு பெயர் போன ஜிப்ரான் இப்படத்தின் பாடல்களுக்காக எட்டு பாடல்களை வழங்கியுள்ள நிலையில் பாடல்கள் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘சதுரங்க வேட்டை’ போன்ற பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த KG.வெங்கடேஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை தினேஷ் பொன்ராஜ் கவனிக்கிறார். தினேஷ் நடனம் அமைக்கிறார்.


களத்தில் சந்திப்போம், பேப்பர் ராக்கெட் போன்ற படங்களுக்கும் வெப்சீரீஸ்களுக்கும் வசனம் எழுதிய அசோக்.R இப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளதோடு, இயக்குநரோடு இணைந்து திரைக்கதையும் அமைத்துள்ளார்.  முன்னதாக சீரியஸ் கதைக்களத்தில் நடித்த சித்தார்த், இப்படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அனைவரும் காதலித்து ரசித்து பார்த்த  ‘பழைய’ சித்தார்த்தைப் பார்க்கலாம் என்பதால் சித்தார்த்தின் ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.


மேலும் படிக்க: Weapon Movie Review: சூப்பர் ஹியூமனாக கலக்கினாரா சத்யராஜ்?.. வசந்த் ரவியின் வெப்பன் திரைப்பட விமர்சனம்..!


Anjaamai movie Review: நீட் தேர்வு அவலத்தை தோல் உரித்ததா அஞ்சாமை? ரசிகர்கள் மனதை வென்றதா? முழு திரைவிமர்சனம்