அரூர் அருகே சூர நத்தம் கிராமத்தில் உள்ள ஆற்றில் கோடை மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  




அரூர் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த இரண்டு மாதங்களாக வரலாறு காணாத அளவில் 106 டிகிரி கொடைவையில் சுட்டெரித்து வந்தது இதனால் விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பயிர்களை காப்பாற்ற முடியாமல் மிகவும் வேதனை அடைந்து இருந்தனர். நெல் ராகி கேழ்வரகு வெற்றிலை சாமை வாழை போன்ற பயிர்கள் எல்லாமே காய்ந்து கருகியது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது இதன் காரணமாக குளம் குட்டை தடுப்பணை ஏறி கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது இதனால் உழவு பணிகளில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பயிரிட்ட பயிர்களை கலைத்துவிட்டு புதிய பயிர்களை நடவு செய்யும் பணியில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு இந்த மழை விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.


இந்த நிலையில் நேற்று காலை சித்தேரி, கலசப்பாடி, அலசநத்தம், சூரிய கடை, மலை பகுதியான ஏகே தண்டா சிட்லிங் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சாரலாக பெய்து கொண்டிருந்த நிலையில் திடீரென கனமழையாக வெளுத்து வாங்கியது சுமார் 6 மணி நேரம் இடைவிடாமல் செய்த கனமழையால் சிட்லிங் அம்மாபேட்டை மற்றும் சூரநத்தம் ஆற்றில் தடுப்பனையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  தடுப்பணை நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரம் ஆடு மாடு போன்ற  கால்நடைகளை மேய்க்க கூடாது.


குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் யாரும் கரையோரம் செல்லக்கூடாது, எனபொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அதேபோல் அரூர் அருகே சித்தேரி மற்றும் அதனை சுற்றியுள்ள நொச்சி குட்டை சூரியக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள மலை கிராம பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு பெய்ய தொடங்கிய மழை கனமழையாக உருவெடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கியது.  


இதனால் சித்தேரி பகுதியில் உள்ள காட்டாறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புதிதாக பெய்து வரும் கனமழை என்பதால் வெள்ள நீர் செந்நிறமாக ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை காரணமாக தங்களது விவசாயப் பணிகளை மிகவும் ஆர்வமுடன் செய்து வருகின்றனர். இதனால் அரூர் அருகே உள்ள மலை கிராமங்கள் உள்ள கிணறுகள், குட்டைகள் அனைத்திலும் நீர் நிரம்பி வழிகின்றது. எனவே விவசாயிகள் பொதுமக்கள் பெரும்மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.