நான்கு ஆண்டுகளாக கோமாவில் சத்யராஜின் மனைவி


சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தனது அம்மா மகேஸ்வரியைப் பற்றி சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துகொண்டார். கடந்த 4 ஆண்டுகளாக தனது அம்மா கோமாவில் இருந்து வருவதாகவும் தானும் தனது தந்தையும் அவரை பார்த்து வருவதாகவும் இந்த பதிவில்  அவர் தெரிவித்துள்ளார். " மூலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் என் அம்மா கடந்த 4 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வருகிறார். அவருக்கு PEG ட்யூப் மூலமாக தான் உணவளித்து வருகிறோம். என் அப்பாவின் அம்மா சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். கடந்த 4 வருடங்களாக என் தந்தை ஒரு சிங்கில் பேரண்டாக இருக்கிறார். நானும் என் அப்பாவிற்கு ஒரு அம்மாவைப் போல் இருந்து வருகிறேன். அம்மாவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவோம் என நாங்கள் நம்புகிறோம். நானும் என் அப்பாவும் இணைந்து ஒரு உறுதியான சிங்கிள் பேரண்ட் குழுவை உருவாக்கி இருக்கிறோம். " என திவ்யா சத்யராஜ் தனது பதிவில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து நடிகர் சத்யராஜ் தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார்.


கடவுளை திட்டியதால் தான் மனைவி கோமாவிற்கு சென்றாரா


சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சத்ய்ராஜ் இப்படி கூறியுள்ளார் " கடந்த நான்கு வருடங்களாக் என் மனைவி கோமாவில் இருக்கிறார். நான் சாமி கும்பிடாததால் தான் சாமியை திட்டுவதால் தான் என் மனைவி கோவில் கிடப்பதால சொல்கிறார்கள். அப்படி சொல்பவர்கல் லூசாகதான் இருக்க வேண்டும். சாமி கும்பிடுவதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் . சாமி கும்பிடுபவன் வீட்டில் யாருக்கும் காய்ச்சல் மாரடைப்பு வருவதில்லையா. யாருக்கும் விபத்து ஏற்படுவதில்லையா. குடும்பத்துடன் கோவிலுக்கு செல்லும் வேன் கவிந்ததில்லையா?" என சத்யராஜ் தன்னை விமர்சிப்பவர்களை வெளுத்து வாங்கியுள்ளார்.


சத்யராஜ் நடிக்கும் படங்கள்


சத்யராஜ் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடிக்கிறார். நலன் குமாரசாமி இயக்கி கார்த்தி  நடித்துள்ள வா வாத்தியார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் சிகந்தர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.




மேலும் படிக்க : Amaran :''ஹலோ சாய் பல்லவியா?''...ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரால் விபரீதம்..எப்படி சமாளிக்கப் போகிறது அமரன் படக்குழு?


Aakash Baskaran : விக்னேஷ் சிவனின் உதவி இயக்குநர் டூ தனுஷ் பட தயாரிப்பாளர்...யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்