S J Suryah: “கலைத்தாயின் இளையமகன் நீ” - சித்தா பட இயக்குநரை பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா! அப்படி என்ன செய்தார் தெரியுமா?
கலைத்தாயின் இளைய மகன் நீர் என்று விக்ரம் நடித்து வரும் வீர தீர சூரன் படத்தின் இயக்குநர் அருண் குமாரை நடிகர் எஸ்.ஜே சூர்யா பாராட்டியுள்ளார்

வீர தீர சூரன்
நடிகர் விக்ரமின் 62 ஆவது படமாக உருவாகி வருகிறது வீர தீர சூரன் . கடந்த ஆண்டு சித்தார்த் நடிப்பில் உருவான சித்தா படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த அருண்குமார் இப்படத்தை இயக்குகிறார். எஸ்.ஜே சூர்யா , துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். எச்.ஆர் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடந்து வருகிறது.
இயக்குநர் அருண் குமாரை பாராட்டிய எஸ்.ஜே சூர்யா
வீர தீரன் சூரன் படத்தின் இயக்குநர் அருண்குமார் குறித்து நடிகர் எஸ்.ஜே சூர்யா பதிவிட்டுள்ளார். தனது பதிவில் அவர் ‘வீர தீர சூரன் படத்தின் எனக்கும் விக்ரம் இடையிலான க்ளைமேக்ஸிற்கு முந்தைய காட்சி மதுரையில் படமாக்கப் பட்டது. இந்த காட்சிக்கு முன்பே இயக்குநர் அருண்குமார் தனது உதவி இயக்குநர்களுடன் 10 நாட்கள் பயிற்சி செய்தார். பின் நடிகர்களை வரவழைத்து 3 இரவுகள் பயிற்சி செய்தோம். கடைசியாக மூன்றாவது நாள் அதிகாலை 5 மணியளவில் இந்த காட்சியை எடுத்து முடித்தார். இயக்குநர் அருண் குமாரைப் பற்றி ஒரே ஒரு வார்த்தை மட்டும் நான் சொல்ல ஆசைப்படுகிறேன் கலைத்தாயின் இளைய மகன் நீர் ஐயா.” என்று கூறியுள்ளார்.
Just In




தங்கலான்
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பார்வதி திருவொத்து , மாளவிகா மோகனன் , பசுபதி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தங்கலான் படத்தின் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன
மேலும் படிக்க : Jama Movie Review: ஜமா படம் ஜமாய்த்ததா இல்லையா? எப்படி இருக்கு? என்ன கரு? - முழு விமர்சனம் இதோ!
Raayan : 100 கோடி வசூல். அதுமட்டுமில்ல... ராயன் திரைக்கதை ஆஸ்கர் நூலகத்திற்கு தேர்வு