ராயன்


தனுஷ் நடித்துள்ள ராயன் படம் கடந்த ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சந்தீப் கிஷன் , காலிதாஸ் ஜெயராம் , செல்வராகவன் , எஸ்.ஜே சூர்யா , துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி , பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


தமிழ் , தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான ராயன் படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று 9 ஆவது நாளாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.  இயக்குநராகவும் நடிகராகவும் தனுஷிற்கு ஒருபக்கம் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. படத்தில் நடித்த மற்ற நடிகர்களான துஷாரா விஜயன் , செல்வராகவன் , எஸ்.ஜே.சூர்யா , சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள். ஏ ரஹ்மானின் பின்னணி இசை , ஒம் பிரகாஷின் ஒளிப்பதிவு என படத்தின் தொழில்நுட்ப ரீதியான அம்சங்களும் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளன. 


100 கோடியை எட்டும் ராயன் வசூல்


ராயன் படம் முதல் நாள் தொடங்கி 8 ஆவது நாள் வரை நிலையான வசூலை எடுத்து வருகிறது. நேற்று ஜூலை 26 ஆம் தேதியோடு ராயன் படம் இந்தியளவில் 62. 97 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. உலகளவில் ராயன் படம் 8 நாட்களில் 99.5 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று 9 ஆவது நாளில் ராயன் படம் 100 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதன் மூலம் தனுஷின் மூன்றாவது படம் 100 கோடி வசூல் பட்டியலில் இணைந்துள்ளது. தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் , வாத்தி உள்ளிட்ட படங்கள் முன்னதாக 100 கோடி வசூல் எடுத்திருந்தன.


ராயன் படத்தின் திரைக்கதை தேர்வு






வசூல் தவிர்த்து ராயன் படத்திற்கு தற்போது மற்றொரு பெருமை கிடைத்துள்ளது. சர்வதேச ஆஸ்கர் விருது வழங்கும் அமைப்பான அகாடமி  ஆப் மோஷன் பிக்ச்சர்ஸ் & சைன்ஸ் ராயன் படத்தின் திரைக்கதையை தங்கள் நூலகத்தில் வைக்க தேர்வு செய்துள்ளது. முன்னதாக ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் படத்தின் திரைக்கதை ஆஸ்கர் நூலகத்தில் வைக்கத் தேர்வு செய்யப் பட்டதைத் தொடர்ந்து தற்போது ராயன் திரைக்கதை தேர்வாகியுள்ளது.