Redin Kinsley and Sangeetha: ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்த சங்கீதாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகள் இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து எந்தத் தகவலும் உறுதியாகவில்லை

 

நடிகர் ரெடின் கிங்ஸ்லி, நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். நடிகைச்சுவையில் கலக்கி வரும் ரெடிங் கின்ஸ்லி முதன்முதலில் சிம்பு நடித்து பாதியில் நின்ற வேட்டை மன்னன் என்ற படத்தில் ரெடின் கிங்ஸ்லி நடித்தார். அந்த படம் வெளியே வரவில்லை. அதன்பிறகு நெல்சன் தான் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் ரெடின் கிங்ஸ்லியை நடிக்க வைத்தார். முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தார் ரெடின் கிங்ஸ்லி. இதனால், அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தன.

 


கிடைத்த வாய்ப்பை கோலமாவு கோகிலா படத்தில் கிங்ஸ்லி சரியாக பயன்படுத்தி கொண்டதால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இதனால் எல்.கே.ஜி., ஏ1, ஜாக்பாட், நெற்றிக்கண், டாக்டர், அண்ணாத்த, இடியட், பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், காஃபி வித் காதல், ஜெயிலர் போன்ற படங்களில் நடித்ததால் கிங்ஸ்லி பிரபலமானார். இந்த நிலையில் கிங்ஸ்லி தனது காதலியான சங்கீதாவை திருமணம் செய்துள்ளார். இவர்களது காதலுக்கு இருவரது வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

 

தம்பதிகள் இருவரும் திருமணத்தை கொண்டாடி வரும் நிலையில் சங்கீதா குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில், சங்கீதா 2009 கிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த சங்கீதா கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றதாகவும் தகவல் வெளியானது. தற்போது 45 வயதாகும் சங்கீதாவுக்கு ஷிவ்ஹியா என்ற மகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.