நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளாளதாக தகவல் வெளியாகியுள்ளன. பெருந்தொற்று காலம் என்பதால் தனி விமானம் மூலம் அமெரிக்கா பயணம் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறது ரஜினி தரப்பு. இந்நிலையில் மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் கிடைத்துள்ளதாக தெரிகிறது, அதனால் விரைவில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள ரஜினிகாந்த அமெரிக்கா பயணம் செய்ய உள்ளார் எனக் கூறப்படுகிறது.


சிறப்பு விமானத்தில் ரஜினி பயணம்


சிறப்பு விமானத்தில் ரஜினி அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த சிறப்பு விமானம் 14 பேர் அமர்ந்து செல்ல கூடியது. அதனால் நடிகர் ரஜினிகாந்த தனது குடும்ப உறுப்பினர்கள் சிலரையும் தன்னுடன் அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்தின் மருமகனும் நடிகருமான தனுஷ் ஏற்கனவே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் தான் இருக்கிறார். அங்கு நடிகர் தனுஷ் தனது ஹாலிவுட் படத்திற்காக படப்பிடிப்பில் நடித்து வருகிறார். அமெரிக்கா செல்லும் ரஜினி, தனுஷ் மற்றும் மகளுடன் இணைந்து தனது மருத்துவ பரிசோதனையையும் மேற்கொள்வார் என்று தெரிகிறது. இதனால் அமெரிக்கா செல்லும் ரஜினியின் பயணம் ஒரு மினி குடும்ப ட்ரிப்பாகவும் அமையவுள்ளது.


இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த நடிக்க வேண்டிய படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் ரஜினி அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார். டப்பிங் செய்ய வேண்டிய பணிகள்  மட்டும் இன்னும் நிறைவடையாத நிலையில், அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு நடிகர் ரஜினிகாந்த் டப்பிங்கில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் அறிய : மீண்டும் படப்பிடிப்பில் அண்ணாத்த ; கட்டுப்பாடுகளுடன் விரைவில் துவக்கம்.






2020ம் ஆண்டு முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் படமும் சூப்பர்ஹிட்டான நிலையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார் 70 வயது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  தீபாவளிக்கு அண்ணாத்த படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதால் படப்பிடிப்பு பணிகளை விரைந்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் படப்பிடிப்பு பணிகளை மீண்டும் தொடங்க முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


சினிமாவை மட்டுமே நம்பி அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும் பலரின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது. அவ்வப்போது சில முன்னனி மற்றும் மூத்த நடிகர்கள் நலிந்த கலைஞர்களுக்கு உதவி வரும் நிலையில், படப்பிடிப்புகள் இயல்புநிலைக்கு திரும்பினால் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் என பலரும் கருதுகின்றனர். ஆனால் கொரோனா வழி கொடுக்காமல் எதுவும் சாத்தியமில்லை  என்பதே நிதர்சனம்.