சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். பல ஆண்டுகள் கழித்து மீனா மற்றும் குஷ்பூ ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தின் ஒருபகுதி படப்பிடிப்பு ராமோஜி பிலிம் சிட்டியில் மிக வேகமாக நடந்து முடிந்தது. மேலும் அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாராவின் பகுதிகள் ஏற்கனவே எடுத்துமுடிக்கப்பட்டுவிட்டது என்று படக்குழு அறிவித்துள்ளது.




இந்நிலையில் எஞ்சியுள்ள சில காட்சிகள் வடமாநிலத்தில் படமாக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு தற்போது படக்குழு தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் ஏற்கனவே சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி, படப்பிடிப்பு பாதியில் நின்றதால் இம்முறை இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு அனுமதிக்கப்படுவர் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் நடிகை குஷ்பூவால் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாமல் இருந்தது. இந்நிலையில் குஷ்பூவும் தற்போது படப்பிடிப்பு பணியில் ஈடுபடுவார் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. 


Netrikann | நீட்டிக்கப்படும் லாக்டவுன் ; ஓடிடி-யில் நேரடியாக வெளியாகும் நயன்தாரா படம்






தீபாவளிக்கு அண்ணாத்த படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதால் படப்பிடிப்பு பணிகளை விரைந்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் படப்பிடிப்பு பணிகளை மீண்டும் தொடங்க முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது. சினிமாவை மட்டுமே நம்பி அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும் பலரின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது. அவ்வப்போது சில முன்னனி மற்றும் மூத்த நடிகர்கள் நலிந்த கலைஞர்களுக்கு உதவி வரும் நிலையில், படப்பிடிப்புகள் இயல்புநிலைக்கு திரும்பினால் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும். 


2018ம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதே ஆண்டு 2.0 படத்தை வெளியிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தினார். எந்திரன் 2.0 படத்தோடு ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவார் என்று செய்திகள் வெளியான நிலையில், தனது தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது அடுத்த படமான பேட்ட படத்தை அறிவித்தார். 2019ம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படம், அந்த கிளாசிக் ரஜினியை மீண்டும் கண்முன் கொண்டுவந்ததாக ரசிகர்கள் கூறியது நினைவுகூறத்தக்கது. 2020ம் ஆண்டு முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் படமும் சூப்பர்ஹிட்டான நிலையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் 70 வயது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.