காஃபி வித் கரண் 8


பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி காஃபி வித் கரண். பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கரண் ஜோஹரின் கேள்விகளுக்கு மனம் திறந்து பதிலளிப்பார்கள். மேலும் பலவிதமான சர்ச்சைக்குரிய உணமைகளும் இந்த நிகழ்ச்சியில் வெளிவரும்.


பிற பிரபலங்களை பற்றி சர்ச்சைக்குரிய பதிலை வரவழைக்கும் கேள்விகளை கேட்பதாக இந்த நிகழ்ச்சியின் மேல் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இருந்தும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது காஃபி வித் கரண் நிகழ்ச்சியின் 8 ஆவது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் முதல் பங்கேற்பாளராக பாலிவுட்டின் பிரபல திருமண ஜோடியான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் கலந்துகொண்டதைத் தொடர்ந்து அடுத்தபடியாக நடிகை ஆலியா பட்  மற்றும் கரீனா கபூர்  கலந்துகொண்டனர்.


ஆலியா பட்






கங்குபாய் படத்திற்காக சமீபத்தில் தேசிய விருது வென்ற ஆலியா பட் பல்வேறு சுவாரஸ்யமான உரையாடல்களை மேற்கொண்டார். அப்போது தன்னுடைய கணவர் ரன்பீர் கபூர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தார் ஆலியா. சமீபத்தில் ஆலியா பட் தன்னுடைய கணவருக்கு தான் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வது பிடிக்காது என்றும்  அதை அவர் தன்னிடம் அழிக்கச் சொல்வார் என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரன்பீர் கபூர் ஆதிக்கம் செலுத்தும் ஒரு ஆணாக இருப்பதாக இணையதளத்தில் விமர்சனங்கள் எழுந்தன.


இது தொடர்பாக பேசிய ஆலியா பட் “ முதலில் நான் இதை கண்டுகொள்ள வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.  எனக்கு நெருக்கமானவர்கள் இந்த பிரச்சனை கையை மீறிப் போவதாக என்னிடம் கூறினார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் ரன்பீர் நிஜவாகவே அதிக்க மனோபாவம் கொண்டவர் என்கிற வகையில் பல கட்டுரைகள் இணையதளத்தில் வெளியாகின. இந்த உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் இருந்தும் நான் என்னுடைய கணவரைப் பற்றி சொன்ன ஒரு விஷயம் தவறாக புரிந்துகொள்ளப் பட்டு எப்படி எல்லாம் மாற்றப் படுகிறது என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது“ என்று ஆலியா பதிலளித்துள்ளார். இணையதளத்தில் குற்றம்சாட்டப் படுவதற்கு நேரெதிரான குணங்களைக் கொண்டவர் ரன்பீர் கபூர் என்று ஆலியா தெரிவித்தார்.


முன்னதாக சில நாட்களுக்கு முன் தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ரன்பீர் கபூர் பெண்களுக்கு எதிரான ஆதிக்க மனநிலையை எதிர்த்து போராடுபவர்களின் பக்கமே தான் நிற்பதாக தெரிவித்தார். அதையும் மீறி தன்னைப் பற்றி தவறான அபிப்பிராயங்கள் வைத்திருப்பவர்களின் போராட்டம் தன்னுடைய கஷ்டத்தை விட பெரிது  என்பதால் அதை தான் மதிப்பதாக தெரிவித்தார்.