பிரேம்ஜி அமரன்:


பிரபல இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி, சிம்பு இயக்கி, நடித்த வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து சென்னை 28 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். 


இதனைத் தொடர்ந்து சத்தம் போடாதே, சந்தோஷ் சுப்ரமணியம், சத்யம், ஒன்பதுல குரு, சேட்டை, நாரதன், சிம்பா என அடுத்தடுத்து பல படங்களில் பிரேம்ஜி அமரன் நடித்தார்.  மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்ததை விட, தனது சகோதரனான வெங்கட் பிரபுவின் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி படங்கள் பிரேம்ஜிக்கு அதிக பெயரை பெற்றுத்தந்தது.


நான் இப்படியே இருக்கிறேன்:


இச்சூழலில் தன்னை மொரட்டு சிங்கிளாக ரசிகர்களிடம் அடையாளப்படுத்திக் கொண்டார் பிரேம்ஜி. இதனிடையே, ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரேம்ஜியின் தந்தை கங்கை அமரன், ”எனது வாழ்க்கையில் கடவுள் எந்த குறையும் வைக்கவில்லை, அன்பான பசங்க. என் வாழ்க்கை நன்றாகத்தான் போய் கொண்டு இருக்கிறது.


என் மனைவி கடந்த ஆண்டு இறந்தது தான் எனக்கு மிகப்பெரிய கவலையே, எப்போதும் பசங்களை பற்றித்தான் யோசித்துக்கொண்டே இருப்பார். பிரேம்ஜிக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்பது என் மனைவியின் ஆசை, கல்யாணத்தை பற்றி பிரேம்ஜியிடம் பேசினால், எனக்கு கல்யாணமே வேண்டாம், வர மனைவிக்கு புடவை வாங்கிக் கொடுத்துக்கொண்டு, குழந்தைகளை வளர்த்துக்கொண்டு என்னால் இருக்க முடியாது, நான் இப்படியே இருக்கிறேன் என்கிறார்.


நானும், என் மகன் பிரேம்ஜியும் ஒரே வீட்டில் இருக்கிறோம் என்னை மிகவும் அன்பாக பிரேம்ஜி கவனித்துக்கொள்கிறார்”என்று கூறினார்.






கல்யாணம் பண்ணிக்கப்போறேன்:


இச்சூழலில் தான் பிரேம்ஜி அமரன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,  ”புத்தாண்டு வாழ்த்துகள், இந்த வருஷம் நான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்” என்று கூறியுள்ளார். ரசிகர்கள் பலரும் இவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க: Anticipated Hollywood Films: "ஜோக்கர் டூ டெட் பூல்" 2024ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் திரைப்படங்கள்!


மேலும் படிக்க: Tamil films of 2024: "அயலான் தொடங்கி GOAT வரை" 2024ல் எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் திரைப்படங்கள்!