Tamil films of 2024: தமிழ் திரையுலகில் நடப்பாண்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களின் பட்டியல் கீழே வழங்கப்பட்டுள்ளன.


தமிழ் திரையுலகம்:


கோலிவுட் எனப்படும் தமிழ் திரையுலகில் வழக்கம்போல 2023ல் நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாகின. இதில் முன்னணி நட்சதிரங்களின் படங்கள் பெரும் வெற்றி பெற்றதோடு, சில சின்ன பட்ஜெட் திரைப்படங்களும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


சில படங்கள் ஒட்டுமொத்தமாக தமிழ் திரையுலகிற்கே புதியதாக இருந்தது. ஆனாலும், நல்ல கதைக்களம் கொண்ட படங்களை ரசிகர்கள் வெற்றி பெறச் செய்தனர். அந்த வகையில் நடப்பாண்டிலும் பல படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்த உள்ளன. அவற்றில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சில படங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


அயலான்:


சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த படம் அயலான். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


கேப்டன் மில்லர்:


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை மையமாக கொண்ட இந்த படம் ஆக்‌ஷன் நிறைந்த அதிரடி கதைக்களத்தில் உருவாகியுள்ளது. 'கேப்டன் மில்லர்' 2024 ஆம் ஆண்டில் முதல் பெரிய தமிழ் திரைப்படமாக இருக்கும். படம் பொங்கலுக்கு வெளியிடப்பட உள்ளது.


வேட்டையன்:


டி.ஜே.ஞானவேலுடன் இணைந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன். நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இதில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் போன்ற பிரபல நட்சத்திரங்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


இந்தியன் 2:


கமல்ஹாசன் மற்றும் ஷங்கரின் 'கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2' படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நீண்டகாலமாக உருவாகி வரும் இந்தபடம் ஒருவழியாக நடப்பாண்டில் வெளியாவது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில்,  இப்படம் 'இந்தியன் 2' மற்றும் 'இந்தியன் 3' என இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. 


கங்குவா:


சூர்யா நடிப்பில் பிரமாண்ட செலவில் உருவாகி வரும் 'கங்குவா' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இந்த பீரியடிக் ட்ராமா திரைப்படம் ஃபேன்டஸி பேண்டஸி கதைக்களத்தில் உருவாகி வருகிறது. 'கங்குவா' நிச்சயமாக 2024 இல் பார்க்க வேண்டிய தமிழ் படங்களில் ஒன்றாகும்.


தங்கலான்:


பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தங்கலான்'. சுதந்திரத்திற்கு முன்பான காலகட்டத்தை மையமாக கொண்டு, ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகி வருகிறது.


விடாமுயற்சி: 


மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு 'விடாமுயற்சி' என்று பெயரிடப்பட்டுள்ளது. சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் பெரும்பகுதி வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. 'விடாமுயற்சி' 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பெரிய திரைகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


The G.O.A.T:


வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் The G.O.A.T. பல நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். லியோ படத்தை தொடர்ந்து வரும் கோடைக்காலத்தில் வெளியாகியுள்ள இப்படம், நடப்பாண்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ் படங்களில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.