தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். ராஜமவுலி இயக்கத்தில் இவர் நடித்த பாகுபலி பாகம் 1 மற்றும் பாகுபலி 2ம் பாகம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானது. மேலும், உலகம் முழுவதும் வசூலை வாரிக்குவித்தது. இந்த படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த சாஹூ படம் தோல்வியடைந்தது.


இதையடுத்து, அவர் நடித்த ராதே ஷியாம் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி வெளியானது. காதல் ரொமான்டிக் படமாக ராதாகிருஷ்ணகுமார் இயக்கிய இந்த படம் தோல்வியடைந்தது. பாகுபலிக்கு பிறகு பிரபாசின் அடுத்தடுத்த 2 படங்களும் தோல்வியடைந்ததால் அவரது ரசிகர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.




இந்த நிலையில், நடிகர் பிரபாஸ் ராதேஷியாம் தோல்வி குறித்து விளக்கம் அளித்து பேசியுள்ளார். இதுதொடர்பாக, அவர் அளித்த பேட்டியில் "ராதே ஷியாம் சரியாக போகாததற்கு கொரோனா பரவல் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது திரைக்கதையில் ஏதேனும் குறை இருந்திருக்கலாம். ராதே ஷியாம் படத்தில் மக்கள் என்னை அந்த கதாபாத்திரத்தில் பார்க்க விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.


பாகுபலி வெற்றிக்கு பிறகு நான் நடிக்கும் படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு மிகுந்த அழுத்தங்கள் உள்ளன. பாகுபலி படத்தில் நடித்தது எனது அதிர்ஷ்டம். ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் படங்களில் தொடர்ந்து நடிக்க உழைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.




சரித்திர கதையாக உருவாகியிருந்த பாகுபலி படம் மிகவும் பிரம்மாண்டமாகவும், விறுவிறுப்பான திரைக்கதையாலும் உருவாக்கப்பட்டிருந்ததால் அந்த படம் வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால், பிரபாசின் அடுத்த படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத்தவறிவிட்டது. இந்த சூழலில், பிரபாஸ் தனது வெற்றிப்பயணத்தை மீண்டும் தொடங்குவதற்காக கே.ஜி.எப். படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் உடன் பணியாற்ற உள்ளார். பிரசாந்த் நீல் – பிரபாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள சலார் திரைப்படம் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.    


மேலும் படிக்க : Suriya Son Dev: நடிக்க வருகிறாரா சூர்யாவின் மகன்..? வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ..!


மேலும் படிக்க : KGF 2 Collection: பாகுபலியின் மொத்த வசூலை 7 நாட்களில் முறியடித்த கே.ஜி.எஃப்.. வாயைப்பிளந்த இந்திய சினிமா..!


மேலும் படிக்க : Watch Video VJ Manimegalai: இவங்கதான் எங்க பைக்கை திருடியிருக்காங்க.. சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட மணிமேகலை..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண