2018-2019 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறையின் மானியக் கோரிக்கையில், அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளில் இருந்து அறிஞர் பெருமக்களால் வெளியிடப்பெறும் நூல்களில் சிறந்தவற்றிற்கு படைப்பிலக்கியங்கள் தலைப்பில் உலகத் தமிழ்ச் சங்கம் வாயிலாகப் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

 

இதற்காக ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களில் உள்ள நாடுகளில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு துணைபுரியும் வகையில், கவிதை, சிறுகதை, புதினம், ஆய்வு நூல் எனத் தமிழ் இலக்கிய வகைகளில் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு, வெளிவந்த தரமான படைப்புகளில் சிறந்த நூலினை தெரிவு செய்து நூலாசிரியருக்குப் பரிசுத் தொகையாக ரூபாய் 50,000/-மும் பதிப்பகத்திற்கு ரூபாய் 10,000/-மும் பரிகத் தொகையாக வழங்கப்படும்.

 

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த நூல்களுக்குப் பரிசுத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும்,  விண்ணப்பப் படிவத்தினை உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் வலைத்தளத்தில் (www.utsmdu.org) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்ப்பட்டு உள்ளது. விண்ணப்பங்கள் மே மாதம் 31 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க மதுரை உலகத்தமிழ்ச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.விண்ணப்பங்களை நூலுடன் இணைத்து அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 



கடனுக்கு டீ தர மறுத்ததால் டீ கடை உரிமையாளருடன் சண்டை -  முதல்வர் நிவாரண நிதிக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவு  







திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த தீபக் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது ஊரில் இருக்ககூடிய டீக்கடை ஒன்றில் நான் கொடுக்கவேண்டிய பண பாக்கி 160 ரூபாய் நிலுவையில் இருப்பதாகவும் இந்த காரணத்தால் நான் டீ கேட்டதற்கு கொடுக்க மாட்டேன் என அந்த டீக்கடை உரிமையாளர் கூறியதால் ஆத்திரமடைந்து கத்தியை காட்டி அந்த கடையில் உள்ள பொருள்களை சேதப்படுத்தியதாகவும் என்மீது புகார் அளிக்கப்பட்டு 21.03.2022 அன்று கைது செய்யப்பட்டேன்.

 

நான் அந்தப் புகாரில் கூறியது போன்று டீக்கடைக்காரர் மீது  எந்த ஒரு தாக்குதலிலும் ஈடுபடவில்லை எனவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, மனுதாரர் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் மேலும் திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலையத்தில் தினமும் காலை கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.