தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவர் நகுல். பிரபல நடிகை தேவயானியின் தம்பியான இவர் தமிழில் காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி சுருபி. இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் பரப்பாக ஆக்டிவாக இருப்பவர்.
இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் குழந்தைகள் வளர்ப்பு, பெண்கள் ஆரோக்கியம், உடல்நலம் போன்ற ஆரோக்கியம் தொடர்பான பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து வந்தார். இந்த நிலையில், பிரபல அழகு நிறுவனமான நேச்சுரல் சலூன் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தது.
இதில் சமூக வலைதளங்களில் லைப்ஸ்டைல் பிரிவில் சிறந்த செல்வாக்கு மிகுந்த நபர் என்ற விருதை ஸ்ரூபி வென்றார். அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் விருதை வழங்கி கவுரவித்தார்.
விழாவில் ஸ்ருபிக்கு விருது வழங்கிய போது நடிகர் நகுலையும் மேடைக்கு அழைத்தனர். அப்போது, நகுல் இல்லை. இல்லை. இது எனது மனைவி ஸ்ருதியின் தினம் என்று பெருமையுடன் கீழே இருந்து கூறினார். ஸ்ராபியின் இயற்பெயர் ஸ்ருதி ஆகும். இவருக்கும் நகுலுக்கும் இடையே கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது. சமூக வலைதளங்களில் இருவரும் தங்களது புகைப்படங்களை அவ்வப்போது பகிர்வார்கள். மேலும், பல சுவாரஸ்யமான வீடியோக்களை தங்களது இன்ஸ்டா பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரையும் சமூக வலைதள பக்கங்களில் ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க : Actor Nawazuddin Siddiqui: ''நான் பிஸி.. தென்னிந்திய படங்களைப் பார்ப்பதில்லை..'' பாலிவுட் நடிகர் நவாசுதீன் பேச்சு
மேலும் படிக்க: Ajith kumar : அஜித்தை கொண்டாட காரணம் என்ன? ரசிகர்கள் நாடித் துடிப்பில் இருப்பவை இது தான்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்