புஷ்பா, கேஜிஎஃப் 2 வெற்றிக்கு பதிலளித்த நவாசுதீன் சித்திக், தான் தென்னிந்திய படங்களைப் பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார்.
புஷ்பா: தி ரைஸ், ஆர்ஆர்ஆர் மற்றும் இப்போது கேஜிஎஃப் சாப்டர் 2 போன்ற படங்கள் பாலிவுட்டில் மிகப்பெரிய வியாபாரத்தை செய்துள்ளன. குறிப்பாக, பார்வையாளர்களும் விமர்சகர்களும் தென்னிந்திய திறமைகளையும் அவர்களின் திறமைகளையும் கவனிக்காமல் இருக்க முடியாது. இந்த நிலையில், தனியார் செய்தி வெப்சைட் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது, நவாசுதீன் சித்திக் தற்போதைய தென்னிந்திய சினிமா குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
டைகர் ஷெராஃப் மற்றும் தாரா சுதாரியாவுடன் நவாசுதீன் சித்திக் நடித்த ஹீரோபந்தி 2 திரைப்படம் இப்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக அவர் பேட்டியளித்தார். ஆர்ஆர்ஆர் மற்றும் புஷ்பா தி ரைஸ் போன்ற படங்கள் மூலம் தென்னிந்தியத் துறையின் சமீபத்திய வெற்றியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, பதிலளித்த நவாசுதீன் சித்திக், ”வெளிப்படையாக, நான் தென்னிந்திய படங்கள் எதையும் பார்த்ததில்லை. தென்னிந்திய படங்கள் எதுவும் இல்லை, நான் கமர்ஷியல் படங்களை பார்ப்பதில்லை. நான் மிகவும் பிஸியாக இருப்பதால் படங்கள் பார்க்க எனக்கு நேரம் கிடைப்பதில்லை. அதனால் வெற்றியைப் பற்றி என்னால் கருத்து சொல்ல முடியாது” என்று கூறினார்.
தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ஒரு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றபின், அப்படத்தை பற்றி ரசிகர்கள் சிறிது காலத்துக்கு பேசுவார்கள். அந்த திரைப்படம் கொடுத்த தாக்கத்தால், அதேமாதிரி கதையில் பல படங்கள் வரும். ஆனால், அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ரசிகர்கள் தியேட்டருக்கு வரும்போது நாங்கள் என்ன வழங்குகிறோம் என்பதை கவனிக்கிறார்கள். அது எந்தப் படத்தின் மூலமாகவும் இருக்கலாம். ஆனால் நீங்கள் வழங்குவது நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்பது முக்கியமானது. நான் அப்படிப்பட்ட படங்களைச் செய்கிறேன், ஆனால் இதுபோன்ற படங்களை நான் பார்ப்பதில்லை, இது எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு ஏன் அப்படி இருக்கிறது என்று நான் இன்னும் கண்டுபிடிக்கவில்லை” என்றார்.
நவாசுதீன் தற்போது இந்தியத் திரையுலகில் மிகவும் திறமையான மற்றும் சிறந்த நடிகர்களில் ஒருவர் ஆவார். அவரது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, ஆர்வம் மற்றும் திறமை ஆகியவற்றால் வெள்ளித்திரையில் பல மறக்கமுடியாத நடிப்பை வழங்கியுள்ளார். இதனால் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளார். தமிழில் ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும் நடித்து பிரபலமானவர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்