வலிகளை கடந்த வலிமை நாயகனாக கொண்டாடப்படும் அஜித், 90களில் இருந்து 22K வரை கொண்டாடப்படுகிறார். இன்றும் ‛பெஸ்ட் ஓப்பனிங் கிங்’ பட்டத்தோடு புகழின் உச்சியில் பறந்து கொண்டிருக்கிறார். மற்ற நடிகர்களைப் போல, அவர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. தனக்கு வருவாய் தரும் படங்களுக்கு கூட விளம்பரம் செய்வதில்லை. தனக்கென ஒரு பாதை, தனக்கென ஒரு வழி என தனித்தே பயணிக்கிறார் அஜித். தன்னைச் சுற்றி எத்தனையோ வேலியை அவர் போட்டாலும், அத்தனையையும் தகர்த்து அவருக்காக தகிக்கிறது ஒரு கூட்டம். 




இணையம் இல்லாத கம்யூட்டர் போல, எந்த இணைப்பும் இல்லாமல் ஒட்டி உறவாடும் அந்த ரசிகர் பட்டாளங்கள், அஜித்தை விரும்ப சில காரணங்கள் இருக்கிறது. அவற்றை தான் பார்க்கப் போகிறோம். 


ஏன் விரும்புகிறார்கள் அஜித்தை?



  • தான் ஒரு ஹீரோ என்றாலும், எந்த இடத்திலும் அவர் ஹீரோயிசம் காட்டியதில்லை. அந்த எளிமை தான் அவரை பிடிக்க டாப் காரணம். 

  • ரசிகர்களை எந்த காரணத்திற்காகவும் தன் லாபத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். அதை ரசிகர்களை அதிகம் கவர்கிறது

  • எந்த கருத்தையும், தன் சொந்த கருத்தையும் எதற்காகவும் முன்வைக்காமல், தன் வேலையை முடித்துக் கொண்டு, மற்றவர்களைப் போல் ஒதுங்கிக் கொள்ளும் குணம். 

  • வரி செலுத்துவது போன்ற அடிப்படை குடிமகனின் கடமைகளை அவர் எப்போதும் தவறியதில்லை. அந்த நேர்மை, அவரை பலருக்கு பிடிக்க காரணமாகிறது. 

  • என்ன தான் ஒதுங்கி இருந்தாலும், வாக்களிப்பது போன்ற தன் அடிப்படை கடமைகளை அவர் எப்போதும் தவறியதில்லை. அதற்கு மட்டும் தான், அவர் வெளியே வருகிறார். 

  • தன் உடம்பு முழுக்க காயம் இருந்தாலும், ரசிகர்களுக்கு பத்து போடும் அவரது ரிஸ்க்குகள் முக்கிய காரணம். 

  • அவர் இந்து- அவரது காதல் மனைவி கிறிஸ்தவர். தன்னுடைய ஆன்மிக நம்பிக்கையில் இருந்து விலகவில்லை. மனைவியின் நம்பிக்கையில் தலையிடுவதும் இல்லை. அந்த சமத்துவமும் பலரை கவர்ந்துள்ளது. 

  • தன்னை நம்பியோருக்கு எப்போதும் உறுதுணையாகவும், உதவியாகவும் இருந்திருக்கிறார், இருக்கிறார். அதை அவர் வெளிப்படுத்தியதும் இல்லை, விளம்பரப்படுத்தியதும் இல்லை. 

  • தன் குணங்களால் மட்டுமே, ஒரு ரசிகர் பட்டாளத்தை கட்டிப் போடும் ஆற்றல் ஒருவருக்கு இருக்கிறது என்றால் அது அஜித் மட்டுமே.

  • 90களில் அவரது அழகு இளம் பெண்களை கவர்ந்தது, 20K ல் அவரது ஆக்ஷன் இளசுகளை கட்டிப் போட்டது, 21Kல் அவரது ஆரவாரம் இளைஞர்களை சேர்த்து தந்தது,  22Kல் எல்லோரும் விரும்பும் நாயகனாக நிமிர்ந்து நிற்கிறார் அஜித். 




இன்னும் கூட பல காரணங்களை கூறிக் கொண்டே போகலாம். பக்கம் போதாது. நாளை பிறந்தநாள் காணும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமாருக்கு இப்போதே வாழ்த்துக்கள் குவியத் தொடங்கியிருக்கின்றன. உழைப்பாளர் தினத்தில், உண்மையான உழைப்பாளர் கொண்டாடப்பட வேண்டியவர் தானே!