மிலிந்த் சோமன்
கோலிவுட் சினிமாவில், பச்சைக்கிளி முத்துச்சரம், வித்தகன், பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து உள்ளவர் மிலிந்த் சோமன் (Milind Soman). இந்தி நடிகரான இவரின் வயது 58. அங்கிதா கோன்வார் என்ற 18 வயது பெண்ணை இவர் கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுமார் 26 ஆண்டு இடைவெளியில் அங்கிதா கோன்வாரும் - மிலிந்த் சோமனும் காதலித்து திருமணம் செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஃபிட்னஸ் பிரியர்
ஃபிட்னஸ் பிரியரான மிலிந்த் சோமன் அவரது உடற்பயிற்சி வீடியோக்களால் அடிக்கடி வைரலாகி வருகிறார். விமான நிலையத்தில் உடற்பயிற்சி செல்வது, படப்பிடிப்பில் பயிற்சி செய்வது ,ரெஸ்டாரெண்ட், ஹைவே என நினைத்த இடத்தில் எல்லாம் உடற்பயிற்சி செய்யத் தொடங்கிவிடுவார். தான் செய்வது மட்டும் இல்லாமல் தனது ரசிகர்கள் படப்பிடிப்பில் இருப்பவர்கள் என அனைவரையும் உடற்பயிற்சி செய்ய ஊக்குவித்து வருகிறார். தற்போது ஸ்விட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளார் மிலிந்த் சோமன். சென்ற இடத்தில் சும்மா இருக்க முடியாமல் 3 டிகிரி குளிரில் வெறும் காலில் ஜாகிங் செய்து வீடியோ வெளியிட்டு மிரள வைத்தார்.
செல்ஃபீ கேட்ட ரசிகரை புஷ் எடுக்க சொன்ன மிலிந்த் சோமன்
இந்நிலையில் ஸ்விட்சர்லாந்தில் மிலிந்த் சோமனை கண்ட ரசிகர் ஒருவர் அவரிடம் செல்ஃபி ஒன்று கேட்டுள்ளார். அதற்கு அந்த ரசிகர் புஷ் அப் எடுத்தால் செல்ஃபி எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகரும் புஷ்-அப் எடுத்து மிலிந்த் சோமனுடன் செல்ஃபி எடுத்துச் சென்றுள்ளார். இந்த வீடியோவை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிலிந்த் சோமன் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க : ABP Nadu Exclusive: அப்போது பெரியார்! இப்போது மோடி! அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்! விளக்கம் கொடுத்த மகள் திவ்யா!