“பொன்னாரின் இமாலய சாதனை!! குமரியில் புதிதாக அருவி திறப்பு !! #marthandambridge #marthandam மேம்பாலம்!! உலக மகா ஊழலுக்கு எடுத்துக்காட்டு இந்த சங்கி” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அதாவது கன்னியாகுமரி மார்த்தாண்டத்தில் இருக்கும் மேம்பாலத்தில் இருந்து அருவிபோல் நீர் கொட்டுவதாக பரப்பப்படுகின்றது.


உண்மை என்ன?


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.




குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி என்று பரப்பப்படும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.


இத்தேடலில் இச்சம்பவம் கோயம்புத்தூரில் நடந்ததாக கூறி இதே வீடியோ பரவி வருவதை காண முடிந்தது.




இதனையடுத்து இச்சம்பவம் உண்மையில் எங்கு நடந்தது என்று ஆராய்கையில் இச்சம்பவம் கோவையின் ராமநாதபுரம்-சுங்கம் மேம்பாலத்தில் நடந்ததாக சமயம் தமிழ் ஊடகத்தில் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.


தொடர்ந்து தேடுகையில் பாலிமர் நியூஸ்கலாட்டா வாய்ஸ் உள்ளிட்ட ஊடகங்களும் இச்சம்பவம் கோயம்புத்தூரில் நடந்ததாகவே செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.




முடிவு:


குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி என்று பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோவில் காணப்படும் சம்பவம் கோயம்புத்தூரில் நடந்ததாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.




ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.


பின்குறிப்புஇந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக newschecker என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை சற்றே  திருத்தி எழுததியுள்ளது.


இதையும் படிக்க: Fact Check: வீட்டில் இருந்து விரட்டப்பட்டாரா மோடி? தீயாய் பரவும் செய்தி உண்மையா?