Babloo Prithiveeraj: பப்லு பிரித்விராஜ் உடனான பிரிவு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷீத்தல் உருக்கமான பதிவை வெளியிட்டிருக்கிறார். 

Continues below advertisement


பப்லு பிரித்விராஜ்


1979-ல் வெளியான நான் வாழவைப்பேன் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் பப்லு பிரித்விராஜ். அதன்பின், அஜித், சிம்ரன் நடிப்பில் வெளியான ‘அவள் வருவாளா’ படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த, பப்லு பிரித்விராஜூக்கு ஒரு கட்டத்தில் திரைப்பட வாய்ப்புகள் குறைந்தன. 


அரசி, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த இவர் தற்போது  ‘கண்ணான கண்ணே’ சீரியலில் நடித்து வருகிறார். சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலமாக இருந்து வரும் பப்லு ப்ரித்விராஜ் தனது நடிப்பிற்காக பாராட்டுக்களைப் பெற்றாலும் மிகப்பெரிய அளவில் தாக்கம் செலுத்தக்கூடிய கதாபாத்திரங்கள் அவருக்கு அமையவில்லை.


இதற்கிடையில், தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் அவரை பிரிந்த பப்லு ப்ருத்திவிராஜ் கடந்த ஆண்டு மலேசியாவை சேர்ந்த 24 வயதான ஷீத்தல் என்பவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். இருவருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டு பிரிந்ததாக இணையத்தில் தகவல்கள் கசிந்தன. 


”நாங்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம்”


இதனை அடுத்து, ஷீத்தல், பப்லுவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் அனைத்துமே தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கி, பப்லுவுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று சூசகமாக கூறினார். இதற்கு இவர்கள் இருவரும் எந்தவித கருத்தும் எங்கேயும் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.


இந்த நிலையில், தற்போது ஷீத்தல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், "என்னுடைய கடந்த கால வாழ்க்கை பற்றி பலரும் கேட்கின்றனர். பலரும் என்னுடைய சூழ்நிலைகளை புரிந்து கொள்ளாமல், என்னை தவறாக புரிந்து கொள்கின்றனர்.


பிருத்வியும் நானும்  திருமணம் செய்து கொள்ளவில்லை.நாங்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம். எங்கள் உறவு நாங்கள் நினைத்தப்படி இல்லை. நாங்கள் சேர்ந்து இருந்தது மிகவும் மகிழ்ச்சியான தருணங்களாக இருந்தன.  அதனால், சில மாதங்களாக பிரிந்து இருக்கிறோம்.


ஆனால்,  இது பிரிவிற்கான நேரம். எங்களின் இந்த முடிவை அனைவரும் மதித்து, எங்களுக்கான நேரத்தை எங்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த நேரத்திற்கு எங்களுக்காக அன்பு கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்" என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 




மேலும் படிக்க


Karthi - Mari Selvaraj: மாரி செல்வராஜ் உடன் கைகோர்க்கும் கார்த்தி! ஷூட்டிங் எப்போது? வெளியான செம்ம தகவல்!


Rajinikanth: தலைவர் என்றும் வேற லெவல்.. 15 பேருக்காக ரஜினிகாந்த் நடித்த படம்!