Arunachal Sikkim poll: அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையானது முன்பே ( ஜூன் 2 ) நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகள்:
இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. அவற்றுக்கு மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலானது, வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்கும் என்றும் இறுதி கட்டமான 7 ஆம் கட்டம் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதில் அருணாச்சல் மற்றும் சிக்கிம் ஆகிய இரு மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் எனவும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில் அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
எதனால் தேதி மாற்றம்:
அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலும் மக்களவை தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இரண்டு மாநில சட்டசபை தேர்தல்களிலும் பதிவான வாக்குகள், லோக்சபா தேர்தல் வாக்குகளுடன் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஆனால், இரண்டு சட்ட பேரவைகளின் பதவிக்காலம் ஜூன் மாதம் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனால், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 2-ஆம் தேதிக்கு மாற்றியமைத்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Also Read: Power Pages-11: இரட்டை இலைக்கு எதிராக வாக்கு சேகரித்த எம்.ஜி.ஆர். - காரணம் என்ன?