Antony Movie: ஜோஷியின் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், கல்யாணி பிரியதர்சன் நடிக்கும் 'ஆண்டனி' படத்தின் அதிகார்வப்பூர்வ டீசர் தற்போது வெளியாகி உள்ளது.


மூத்த இயக்குனர் ஜோஷி மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஆகியோரின் இரண்டாவது கூட்டணியில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி உள்ள ஆண்டனி படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு எழுத்தாளர் ராஜேஷ் வர்மா கதை எழுதி உள்ளார். இப்படத்தை ஐன்ஸ்டின் சாக் பால் தயாரித்துள்ளார் மற்றும் சுஷில்குமார் அகர்வால், ரஜத் அகர்வால், நிதின் குமார், கோகுல் வர்மா மற்றும் கிருஷ்ணராஜ் ராஜன் ஆகியோர் இணைந்து ஐன்ஸ்டின் மீடியா, நெக்ஸ்டல் ஸ்டுடியோ மற்றும் அல்ட்ரா மீடியா என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் கீழ் தயாரித்துள்ளனர்.  ஷிஜோ ஜோசப் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். 'ஆண்டனி' படம் ரத்த உறவுகளின் எல்லைகளைத் தாண்டிய உணர்வுப்பூர்வமான பயணத்திற்கு ரசிகர்களை அழைத்து செல்கிறது.  படத்தின் டீஸர் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது மற்றும் வெற்றிகரமான 'பொரிஞ்சு மரியம் ஜோஸ்' படத்திற்குப் பிறகு இந்த கூட்டணியில் உருவாகும் படத்தை காண ரசிகர்கள் ஆர்வலர்கள் உள்ளனர்.


ஜோஜு ஜார்ஜ், கல்யாணி பிரியதர்சன், செம்பன் வினோத் ஜோஸ், நைலா உஷா உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள 'ஆன்டனி' படம் மலையாளம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை ஃபார்ஸ் பிலிம்கோ மோஷன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.  இரத்த உறவுகளை விட இதயத்திற்கு நெருக்கமான உறவுகளை பற்றி படம் பேசுகிறது. முன்னணி நடிகர்களைத் தவிர, விஜயராகவன், ஆஷா சரத், ஜினு ஜோசப், ஹரிபிரசாந்த், அப்பானி சரத், பினு பப்பு, சுதிர் கரமனா, ஜூவல் மேரி, ஜிஜு ஜான், பத்மராஜ் ரதீஷ், ஆர்.ஜே.ஷன், ராஜேஷ் சர்மா, சுனில் குமார், நிர்மல் பாலாழி, கராத்தே கார்த்தி, சிஜோய் வர்கீஸ், டைனி டாம் மற்றும் மனோஹரியம்மா போன்ற அனுபவமிக்க நடிகர்களும் இப்படத்தில் உள்ளனர். 


ரெனதீவின் ஒளிப்பதிவு, ஜேக்ஸ் பிஜோயின் மனதைக் கவரும் இசை மற்றும் ஜோஷியின் இயக்கத்தில் ஆண்டனி படம்  உருவாகி உள்ளது.  நிச்சயம் இந்த படம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படத்தின் கேரளா விநியோக உரிமையை ட்ரீம் பிக் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 'ஆண்டனி' படத்தின் முதன்மை இணை இயக்குநராக சிபி ஜோஸ் சாலிசேரியும், ஆக்சன் இயக்குநராக ராஜசேகர் பணிபுரிந்துள்ளனர்.  எடிட்டர் ஷியாம் சசிதரன் மற்றும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பாளர் ஆர்.ஜே.ஷான் உட்பட திறமையான குழுவினரையும் ஆண்டனி கொண்டுள்ளது. கலை இயக்குநராக திலீப் நாத் தனது கலைத் திறனை வெளிப்படுத்துகிறார், அதே நேரத்தில் பிரவீன் வர்மா காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி உள்ளார்.