LEO Release LIVE : லியோ படம் சுமாரா? சூப்பர் டூப்பரா? மக்களின் கருத்து என்ன?
LEO Release LIVE Updates: லியோ திரைப்படம் குறித்த அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.
ABP NADULast Updated: 19 Oct 2023 04:17 PM
Background
மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணி இரண்டாவது முறையாக மீண்டும் இணைகிறது என்ற தகவல் வந்தவுடன் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியது. அதன் பின், படத்தின் பூஜை சிறப்பாக நடைப்பெற்றது. முதல் கட்ட படப்பிடிப்பிற்காக அப்படக்குழு காஷ்மீர்...More
மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணி இரண்டாவது முறையாக மீண்டும் இணைகிறது என்ற தகவல் வந்தவுடன் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியது. அதன் பின், படத்தின் பூஜை சிறப்பாக நடைப்பெற்றது. முதல் கட்ட படப்பிடிப்பிற்காக அப்படக்குழு காஷ்மீர் சென்று இருந்தது. இதனையடுத்து விஜய்யுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற பட்டியல் வெளியானது. முதலாவதாக, விஜய்யுடன் 4 படங்களை நடித்த திரிஷா இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வந்தது.அதன் பின், அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், அனுராக் காஷ்யப், கெளதம் மேனன், மிஷ்கின், பாபு ஆண்டனி, மன்சூர் அலி கான் ஆகியோர் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வந்தது.இதனை தொடர்ந்து, டைட்டில் ரிவீல் வீடியோ, ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள், கதை சொல்லும் ஸ்பெஷல் போஸ்டர்கள், ட்ரெய்லர், மூன்றாவது சிங்கிள் ஆகியவை அடுத்தடுத்து வெளியானதுபடப்பிடிப்பு முடித்த கையுடன் போஸ்ட் புரடக்ஷன் வேலைகளில் லியோ படக்குழு தீவரம் காட்டியது. பிரபல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பது, சமூக வலைதளத்தில் படம் குறித்து பதிவிடுவது, போஸ்டர்களை பொது போக்குவரத்து வாகனத்திலும் வாகனம் நிறுத்தும் இடத்திலும் ஒட்டுவது, மக்கள் கூடும் இடத்தில் படக்காட்சிகளை திரையிடுவது, ட்ரெய்லரை திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் திரையிடுவது, ஸ்பாட்டிஃபையுடன் இணைந்து விளம்பரம் செய்வது என தீயாய் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.முன்னதாக, லியோவின் பிரிமீயர் காட்சி, 18 ஆம் தேதியன்று திரையிடப்படலாம் என கமலா சினிமாஸ் பதிவிட்டது. ஆனால், இது குறித்த அப்டேட் எதுவும் வரவில்லை. 18 ஆம் தேதி படம் வெளியாகாது, என்று தெரிந்தவுடன் 19 ஆம் தேதியன்று அதிகாலை சிறப்பு காட்சி இருக்கிறதா? என்ற கேள்வி வந்தது. 4 மணி காட்சிக்கு அனுமதி தரமுடியாது என அரசு உத்தரவிட்ட பின், லியோ தயாரிப்பு நிறுவனம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றமும் 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது என தீர்ப்பு வழங்கியது. 7 மணி காட்சி குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தது. தற்போது, லியோ படத்துக்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என உள்துறை செயலாளர் அமுதா தெரிவித்துள்ளார். அரசாணையின்படி நாளை முதல் அக்டோபர் 25 வரை லியோ படத்துக்கு 9 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
LEO Release LIVE : லியோ திரைப்படம் பார்த்துவிட்டு, வருபவர்களுக்கு சுடச்சுட பிரியாணி தயார்
இன்று லியோ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் , காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சார்பில் படம் பார்த்து விட்டு வெளியே வரும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு சுடச்சுட பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று பொதுமக்களுக்கும், பிரியாணி வழங்கி வருகின்றனர். 3 காட்சிகள் முடியும் வரை பிரியாணி வழங்கப்படும் என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தகவல்.
LEO FDFS LIVE : விரைவில் விஜய் பதவிக்கு வருவார்..ரசிகர்கள் தியேட்டரில் முழக்கம்!
தனக்கும் தன் குடும்பத்திற்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வேண்டும் என விஜய், போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கேட்க, “நீ சட்டமும் இல்லை, அரசாங்கமும் இல்லை அவர்கள் சொன்னால்தான் பாதுகாப்பு தர முடியும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் சொல்லும் சீன் வரும்போது...
“விரைவில் விஜய் பதவிக்கு வருவார்” என ரசிகர்கள் தியேட்டரில் முழக்கம்.
சோனா மீனா திரையரங்கில் விஜய் ரசிகர்கள் நடனமாடிய போது திரையரங்கில் பணிபுரிக்கூடிய பணியாளர்கள் இங்கு நடனம் ஆடக்கூடாது என கட்டுப்பாடு விகித்தனர். இருப்பினும், விஜய் ரசிகர் ஒருவர் கையில் பட்டாசுகளை வைத்து வெடித்தார்.
LEO Review LIVE : லியோவில் இடம்பெறும் கரு கரு கருப்பாயி பாடல்!
லோகேஷ் கனகராஜின் படங்களில் எப்போதும் விண்டேஜ் பாடல்கள் இடம்பெறும். இந்த முறை லியோவில், ஏழையின் சிரிப்பின் படத்தில் வரும் “கரு கரு கருப்பாயி” பாடல் இடம்பெற்றுள்ளது.
LEO FDFS LIVE : ஆந்திரா, தெலங்கானாவில் கொண்டாட்டம் எப்படி?
ஆந்திரா, தெலங்கானாவில் முதல் காட்சி 8:30 மணிக்கு ஆரம்பித்துள்ளது. அங்கு பெரிதாக கொண்டாட்டம் எதுவும் காணப்படவில்லை என்றாலும் திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் மற்றும் எல்.சி.யூவிற்காகதான் லியோ படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்றுதாக தெலுங்கு ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.
LEO FDFS LIVE : உற்சாகத்துடன் படம் பார்க்க வந்த மக்கள்!
லியோ படத்தை பார்க்க தஞ்சாவூர் விஜயா தியேட்டரில் ஆவலாக குவிந்த ரசிகர்கள்.
பல தடைகளைத் தாண்டி சர்ச்சைகளுக்கு இடையில் இன்று காலை ரிலீஸ் ஆகும் விஜய் நடித்துள்ள லியோ படத்தை காண ஆடல் பாடல் உற்சாகத்துடன் ரசிகர்கள் தஞ்சாவூர் விஜயா தியேட்டர் முன்பு குவிந்துள்ளனர்.
LEO FDFS LIVE : லியோ டி ஷர்ட் அணிந்து அசத்தும் ரசிகர்!
நா ரெடிதான் பாடலில் இடம்பெறும், “மில்லி உள்ள போனா போதும்…கில்லி வெளிய வருவான்டா…” என்ற பாடல் வரிகளை கொண்ட டி ஷர்ட் ஒன்றை அணிந்து தூத்துக்குடி ரசிகர் ஒருவர் படம் பார்க்க வந்துள்ளார்.
LEO FDFS LIVE : ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்திற்கு கிரெடிட்!
லியோ படம் தொடங்கும் முன்பாக, புகழ்பெற்ற ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்திற்கு கிரெடிட் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தின் கதையை தழுவி லியோ எடுக்கப்பட்டுள்ளதால் கிரெடிட் கொடுக்கப்பட்டுள்ளது.
LEO FDFS LIVE : வெறிச்சோடி காணப்படும் திருச்சி சோனா மீனா திரையரங்கம்!
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சோனா மீனா திரையரங்கில் லியோ படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் படம் ரிலீஸ் ஆகும் அன்று அவரது ரசிகர்கள் உற்சாகமாக பட்டாசு வெடித்து ஆடல் பாடலுடன் கொண்டாடுவார்கள். ஆனால் இன்று மாநில அரசு சில கட்டுப்பாடுகளை விதித்ததால் ரசிகர்கள் அமைதியான முறையில் திரையரங்கு வெளியே உள்ளனர்.
LEO FDFS LIVE : ஹாலிவுட் ஸ்டைலில் படத்தை எடுத்துள்ளார்கள்!
“ஹாலிவுட் ஸ்டைலில் படத்தை எடுத்துள்ளார்கள். சூப்பராக நடித்திருக்கிறார் விஜய். லோகேஷ் கனகராஜ் சூப்பராக படம் எடுத்துள்ளார். குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்து பார்க்க வேண்டிய படம்.” - கேரளாவில் படம் பார்த்த ரசிகர்.
ஒரு சில அஜித் ரசிகர்கள், விஜய் படம் நன்றாக இருந்தால் கூட, அப்படம் டிஸாஸ்டர் என்றுதான் ட்ரால் செய்வார்கள். அந்த வகையில், லியோ படமும் மொக்கையாக உள்ளது என பதிவிட்டு வருகின்றனர்.
LEO LCU LIVE : எல்.சி.யூவில் ஐக்கியமாகும் லியோ படம்!
லியோ படத்தில் கைதி பி.ஜி.எம் இடம்பெற்றுள்ளது அத்துடன், விக்ரம் படத்தில் வரும் முகமூடி போட்ட நபர்கள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளனர். ஆக, லியோ எல்.சி.யூவில் ஐக்கியமாகிறது.
கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் படம் பார்த்த பொதுமக்களும் மக்கள் செய்தி தொடர்பாளர்களும் லியோ படத்தின் முதல் பாதி சூப்பராக இருப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
LEO Release LIVE: லியோ காட்சிகளை பதிவிட்ட இணையவாசிகள்.. உடனடியாக நடவடிக்கை எடுத்த படக்குழு..!
கேரளா மற்றும் கர்நாடகாவில் லியோ படத்தின் முதல் காட்சி பார்க்க சென்ற ரசிகர்களை காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர். இதனையடுத்து உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கிய படக்குழு பதிவுகளை நீக்கி வருகிறது.
LEO Release LIVE: உலகமெங்கும் வெளியானது லியோ படம்.. விடிய விடிய ரசிகர்கள் கொண்டாட்டம்..!
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் தியேட்டரில் வெளியாகியுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில் விடிய விடிய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
LEO Release LIVE : லியோ படம் எல்.சி.யூவில் அடங்குமா?
பல நேர்காணல்களில் லோகேஷ் கனகராஜ், லியோ படம் எல்.சி.யூவில் வராது, அது ஒரு ஸ்டாண்ட் அலோன் படம் என்று சொன்னாலும் சில ரசிகர்கள் லியோ படம் எல்.சி.யூவில் அடங்குமா? என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்பி வருகின்றனர்.
LEO Release LIVE : போஸ்டர் அடி..அண்ணன் ரெடி..கொண்டாடி கொளுத்தனும் டி!
முதல் நாள் முதல் காட்சியை கொண்டாட மக்கள் ரோகிணி திரையரங்கிற்குதான் படையெடுப்பார்கள். அந்த வகையில், நாளை லியோ படத்தின் ரிலீஸை கொண்டாட பேனர்கள், போஸ்டர்கள் ரெடியாக உள்ளது.
LEO Release LIVE : 21 நாட்களுக்கான முன்பதிவை திறந்து வைத்த கமலா சினிமாஸ்!
திரையரங்கத்தை பொறுத்தவரை எப்போதும் அடுத்த 5-6 நாட்களுக்கான முன்பதிவு ஆப்ஷன் மட்டுமே இருக்கும். லியோ படத்திற்காக முதன்முறையாக அடுத்த 21 நாட்களுக்கான (அக்டோபர் 19 முதல் நவம்பர் 8 வரை) முன்பதிவை சென்னையில் உள்ள பிரபல கமலா சினிமாஸ் திறந்து வைத்துள்ளது.
LEO Release LIVE : பக்கத்து மாநிலங்களுக்கு படையெடுக்கும் விஜய் ரசிகர்கள்!
தமிழ்நாட்டில் முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்படுவதால், விஜய் ரசிகர்கள் 4 மணி சிறப்பு காட்சியை காண கேரளா, கர்நாடகா ஆகிய பக்கத்து மாநிலங்களுக்கு படையெடுத்துள்ளனர்.
LEO Release LIVE : விஜய்தான் எனக்கு இடம் கொடுத்தார் - லோகேஷ் கனகராஜ்
‘லியோ நடந்ததுக்கு காரணமே மாஸ்டர் படம் தான். அப்படி ஒரு படம் பண்ணி சக்ஸஸ் காட்டுன அப்புறம் தான், 100% உங்க படமாவே இருக்கட்டும் என விஜய் சொன்னார். அதற்கு முழு காரணம் விஜய் கொடுத்த சுதந்திரம் தான். எங்கள் இருவருக்கும் என்ன வித்தியாசம் இருந்துச்சு என கேட்டால், இருவருக்குமான புரிதல் இன்னும் அதிகமானது என்றே சொல்லலாம்’ என கூறினார் லோகேஷ் கனகராஜ்.
LEO Release LIVE : விஜய் படம் என்றாலே பிரச்சினை இருக்கும் - லோகேஷ் கனகராஜ்
"அவர் படம் என்றாலே சின்ன சின்ன பிரச்சினை இருந்துட்டு தான் இருக்கு. எனக்கு அது மாஸ்டர் பட சமயத்தில் இருந்தே தெரியும். உதாரணம் ட்ரெய்லரில் வந்த கெட்ட வார்த்தை பயன்படுத்தியது சர்ச்சையாக மாறியது. விமர்சனங்கள் வந்த பிறகு அதை மியூட் செய்து விட்டோம். " - சமீபத்திய பேட்டியில் பேசிய லோகேஷ் கனகராஜ்
LEO Release LIVE : ரோகிணி தியேட்டரில் லியோ திரையிடப்படுமா?
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதியன்று வெளியான லியோ ட்ரெய்லரை ரோகிணி தியேட்டர் திரையிட்டது. அங்கு குவிந்த பல மக்கள், தியேட்டர் பொருட்களை சேதப்படுத்தியதால், அந்த தியேட்டருக்கு பெரும் பொருட்செலவு ஏற்பட்டது.
அசம்பாவிதங்களை தடுக்க, நாளை வெளியாகும் லியோ படத்தை திரையிடப் போவதில்லை என ரோகிணி தியேட்டர் நிறுவனம் அறிவித்து இருந்த நிலையில், இப்போது லியோ படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
LEO Release LIVE: லியோ படம் ரிலீஸ் ... இணையத்தில் ட்ரெண்டாகும் லோகேஷின் முந்தைய படங்கள்..!
லோகேஷ் கனகராஜின் லியோ படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், இணையத்தில் விக்ரம், ரோலக்ஸ், டில்லி என அவரின் முந்தைய படங்களில் இடம் பெற்ற கேரக்டர்கள் ட்ரெண்டிங்கில் உள்ளது.
LEO Release LIVE: விழுப்புரம் 5 நிமிடத்தில் தயாராகும் லியோ டீ சர்ட்
லியோ திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ள நிலையில் விழுப்புரத்தில் "லியோ" டீ சர்ட் 5 நிமிடத்தில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் லியோ டி சர்ட் வாங்க ஆன்லைன் புக்கிங் என அதிக அளவில் ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.
LEO Release LIVE : லியோ ஃபீவரில் சினிமா ரசிகர்கள்!
மாஸ்டர் படத்திற்கு பின், லோகேஷ் கனகராஜ் - விஜய் காம்போ மீண்டும் இணையவுள்ளது என்ற தகவல் வந்த நாள் முதல் அனைவரும் லியோ படத்தை பார்க்க ஆவலாக இருந்து வருகின்றனர்.