சமூக வலைத்தளங்களில் அதிகமாக கேளி மற்றும் கிண்டல் செய்யப்படுபவர்கள் யார் என்றால் அது 90 கிட்ஸ் தான்.  ஒரு பக்கம் 2K கிட்ஸ் 90 கிட்ஸை கலாய்க்க மற்றொரு புறம் 80 கிட்ஸ்கள் 90 கிட்ஸை பார்த்து சிரிக்க என்று அவர்களுக்கு ஏற்படும் கேளி கிண்டல்கள் எக்கச்சக்கம். இப்படி சமூக வலைத்தளத்தில் தான் அவர்கள் அதிகமாக ஓட்டப்படுகிறார்கள் என்று பார்த்தால் யூடியூப் சேனல்களுக்கும் கிடைத்த எலிகள் 90 கிட்ஸ் தான். 


ஏனென்றால் தமிழில் நீங்கள் தற்போது வீடியோ போட்டு வரும் எந்த ஒரு யூடியூப் சேனலை எடுத்தாலும் அதில் 90 கிட்ஸ் தொடர்புடைய வீடியோக்கள் இல்லாமல் இருக்காது. அவையும் பெரும்பாலும் 90 கிட்ஸ் வாழ்க்கையை பிரதிபளிப்பவையாக இருக்கும். உதாரணத்திற்கு அவர்கள் சிங்கள் ஆக இருப்பது தொடர்பாக பல வீடியோக்கள் உள்ளது. அதேசமயம் அவர்களுக்கும் 2K கிட்ஸ்களுக்கும் ஏற்படும் மோதல்கள் தொடர்பாக 90 கிட்ஸ் vs 2K கிட்ஸ் என்று வரிசையாக வீடியோக்கள் இருக்கும்.




இவற்றுக்கு ஒருபடி மேலே உள்ள வீடியோ தான் 90 கிட்ஸுக்கு கல்யாணம் என்ற தலைப்பில் இருக்கும் வீடியோக்கள். இந்த வீடியோக்களின் பெரும்பாலும் 90 கிட்ஸுக்கு கல்யாணம் நடப்பது எவ்வளவு கடினம். அப்படி மீறி நடந்தால் அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் என பலவற்றை இந்த வீடியோக்கள் அடுக்கும் வகையில் அமைந்திருக்கும். அதேபோல தான் 90 கிட்ஸ் காதலில் விழுந்தால் என்ன ஆகும் என்ற வீடியோக்களும்.  இதில் தலைப்பே எப்படி இருக்கும் என்றால் 'சிங்கிளாக இருந்த 90 கிட்ஸ் காதலில் விழுந்தது' என்று ஒரு சில வீடியோக்கள் இருக்கும்.  மேலும் 90 கிட்ஸ் பெற்றோர்கள் ஆனால் எப்படி இருக்கும் என்பது போன்ற வீடியோக்களும் இடம்பெற்றுள்ளன.


இவை ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் 90 கிட்ஸின் அழகான காலங்கள் குறித்து பேசுவதற்கும் பல வீடியோக்கள் உள்ளன. குறிப்பாக 90 கிட்ஸ் ஸ்கூல் வாழ்க்கை, 90 கிட்ஸ் விளையாடிய கேம்ஸ், 90 கிட்ஸ் ரசித்த உணவு வகைகள் என்றும் பல வீடியோக்கள் உள்ளன. அந்தவகையி சமீபத்தில் ஹிட்டான ஒரு வீடியோ தான் அந்த தேன்மிட்டாய் வீடியோ. 90 கிட்ஸ் தங்களின் பெரிய அடையாளங்களில் ஒன்றாக பார்ப்பது தேன் மிட்டாய். இந்த தேன் மிட்டாய் வைத்து வந்த ஒரு வீடியோ அதிக லைக்ஸ் மற்றும் பார்வைகளை பெற்றது. இதில் இருந்தே நாம்  யூடியூப் செனல்கள் எப்படி 90 கிட்ஸை கலாய்க்க மற்றும் கவர முயற்சி செய்து வருகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.  


 



எவை எப்படி இருந்தாலும் 90 கிட்ஸ் எப்போதும் 90 கிட்ஸாக தான் இருப்பார்கள். எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் அவர்களின் நினைவலைகளில் இருந்து நீங்காமல் இருக்கும் சில விஷயங்கள் எப்போதும் அவர்களிடம் இருக்கும். எப்போதும் எந்தவித கலாய்த்தலுக்கும் சண்டைக்கும் செல்லாத 90 கிட்ஸ்கள் இந்த வீடியோக்களையும் பார்த்து ரசித்து விட்டு எதையும் சொல்லாமல் கடந்து செல்லும் மனம் படைத்தவர்கள். சிறுவயதில் கணினி அதிகம் பயன்படுத்தாத 80 கிட்ஸ் மற்றும் சிறு வயது முதல் அதிகமாக கணினி பயன்படுத்தும் 2k கிட்ஸ் ஆகியோருக்கு மத்தியில் சிக்காமல் இவை இரண்டையும் தங்களுடைய சிறு வயதில் பார்த்தவர்கள் என்ற பெருமையுடன் 90 கிட்ஸ் எப்போதும் இருப்பார்கள். 


மேலும் படிக்க: வாரத்தின் முதல் நாள்... இந்த 5 பாடல்களை கேட்டு சுறுசுறுப்பாக துவக்கலாமே!