பொதுவாக வார விடுமுறை என்பது நமக்கு ஓய்வு எடுக்க அளிக்கப்படுவது. ஆனால் அந்த இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு திங்கட்கிழமை காலையில் நம்முடைய மனது மேலும் விடுமுறையே எதிர்பார்த்து சோர்வாக இருக்கும். அவ்வாறு இருக்கும் சமயத்தில் நம்முடைய மனதை உற்சாகப்படுத்தவும் உத்வேக படுத்தவும் ஒரு சில பாடல்களை கேட்டால் நமக்கு நன்றாக இருக்கும். இப்படி நாம் வாரத்தின் முதல் நாள் கேட்க தமிழ் சினிமாவில் வெளியான பாடல்கள் என்னென்ன தெரியுமா?


1. நட்சத்திர ஜன்னலில்:


90 கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் ஒன்றான 'சூர்ய வம்சம்'. இந்தப் படத்தில் அமைந்த ஒரு நம்பிக்கை தரும் பாடல் நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்குது. இதில் இடம்பெற்றுள்ள வரிகள் நமக்கு நல்ல உத்வேகத்தை தரும் வகையில் அமைந்திருக்கும்.  உதாரணமாக, 


சிட்டுக்குச் சிறகடிக்கச் சொல்லித்தந்ததாரடி யாரடி
மீனுக்கு நீச்சல் கற்றுத் தந்ததாரோ
மேகத்தில் வீடு கட்டி வாழலாம் வாழலாம்
மின்னலில் கூரை பின்னிப் போடலாமா
ஓங்கும் உந்தன் கைகளால் ...


 



2. சிங்கம் ஒன்று:


அருணாச்சலம் திரைப்படத்தில் இடம்பெற்ற மிகவும் முக்கியமான பாடல் இது. இந்தப் பாடலின் வரிகள் நாம் எவ்வாறு சோர்ந்து இருந்தாலும் நம்மை உயர்த்தும் வகையில் அமைந்திருக்கும். இசையமைப்பாளர் தேவாவின் இசை நமக்கு அப்படி ஒரு உத்வேகத்தை தரும். 


இப்பாடலின் வரிகள், "பெத்தவர்கள் நினைத்ததை முடிப்பான் முடிப்பான்
மற்றவர்கள் சுகத்துக்கு உழைப்பான் உழைப்பான்
சத்தியத்தின் பாதை வழி நடப்பான் நடப்பான்
மக்கள் பணம் மக்களுக்கே கொடுப்பான் கொடுப்பான்..."


 



3. வெற்றி நிச்சயம்:


அண்ணாமலை திரைப்படத்தில் இடம்பெற்ற 'வெற்றி நிச்சயம்' பாடல் தோல்விகளை கண்டு துவண்டு உள்ளவர்களுக்கு நல்ல நம்பிக்கை தரும் பாடலாக அமைந்திருக்கும். தேவாவின் இசை மற்றும் எஸ்பிபியின் குரல் இப்பாடலுக்கு கூடுதல் வலிமை சேர்த்திருக்கும். இப்பாடலில் குறிப்பாக,


"இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்
வானமே தாழலாம் தாழ்வதில்லை தன்மானம்
மேடுபள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்
பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்
பொய்மையும் வஞ்சமும் உனது பூர்வீகமே
ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே
எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே...."


 



4. எதிர்நீச்சல் :


எதிர்நீச்சல் திரைப்படத்தில் அனிரூத் இசையில் இடம்பெற்ற உத்வேகம் அளிக்கும் பாடல் எதிர் நீச்சல் அடி என்ற பாடல். இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளும் நமக்கு நல்ல உற்சாகத்தை தரும். குறிப்பாக, 


"நாளை என்றும் நம் கையில் இல்லை
நாம் யாரும் தேவன் கைபொம்மைகளே...
என்றால் கூட போராடு நண்பா
என்றைக்கும் தோற்காது உண்மைகளே...
உசேன் போல்ட்டை போல் நில்லாமல் ஓட
கோல்டு தேடி வரும்...
உந்தன் வாழ்வும் ஓர் ஒலிப்பிக்கை போலே..
வியர்வை வெற்றி தரும்..."


 



5. முன் செல்லடா:


மனிதன் படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் இடம்பெற்ற இந்தப் பாடல் நம்மை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருக்கும். இந்தப் பாடலின் வரிகள் குறிப்பாக,


"ஆயிரம் தடைகளை
உன் முன்னே காலம் இன்று
குவித்தாலும் ஆயிரம் பொய்களை
ஒன்றாய் சோ்ந்து உன்னை
பின்னால் இழுத்தாலும்... முன் செல்லடா முன்னே செல்லடா.."


 



இவ்வாறு தமிழ் சினிமாவில் நமக்கு உத்வேகம் அளிக்கும் பாடல்கள் நிறையே உள்ளன. அவற்றில் சிலவற்றை தான் நாம் இங்கு பார்த்தோம். 


மேலும் படிக்க: HBD Pandiraj: இயக்குனர் பாண்டிராஜ் தந்த டாப் 5 ‛மயிலாஞ்சி’ பாடல்கள் இதோ...!