டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடக்கிறது. ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி நடிகர் தனுஷுக்கு அசுரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருதும், விஜய் சேதுபதிக்கு சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக சிறந்து துணை நடிகர் விருதும், விஸ்வாசம் திரைப்படத்திற்கு இசையமைத்த இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும், சிறந்த பிராந்தியமொழி பட விருது அசுரனுக்கும், சிறந்த குழந்தை நட்சத்திர விருது நாகவிஷாலுக்கும், வழங்கப்படுகிறது.
ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடனும், தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடனும் விழாவில் கலந்துகொண்டனர்.
விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடும், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், விருது பெறும் விஜய்சேதுபதி விருது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு விஜய்சேதுபதி பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “தேசிய அளவிலான கலைஞர்களை ஒரே இடத்தில் சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஷில்பா கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்தக் கதாபாத்திரத்தில்இயக்குநர் தியாகராஜ குமாரராஜாவை மட்டும் நம்பி நடித்தேன். தேசிய விருது பெறுவது மகிழ்ச்சி” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க:Jail Movie Release: உலகம் முழுக்க ’ஜெயில்’ - வெளியிடுகிறார் ஞானவேல் ராஜா!
maaran | ஓடிடியில் வெளியாகிறதா தனுஷின் மாறன் ? - அதிர்ச்சியில் ரசிகர்கள்!