பிக்பாஸ் சீசன் 5 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. முதல் வாரத்தில் நமீதா எதிர்பாராதவிதமாக வெளியேறிவிட்ட நிலையில் கடந்த வாரம் நாடியா சங் வெளியேறினார். இந்நிலையில் இன்று மற்றொருவர் வெளியேற இருக்கிறார். அது குறித்து பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள். அபிஷேக் ராஜா வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மீதம் 15 பங்கேற்பாளர்கள் இருப்பார்கள்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களுக்கான சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. வழக்கமாகவே பிக்பாஸில் கலந்துக் கொள்ளும் எல்லாருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் வழங்கப்படாது. போட்டியாளரின் பிரபலத்தைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் அது மாறுபடும். ஒரே மாதிரியான சூழலில், ஒரே மாதிரியான போட்டிக் களத்தில், ஒரே மாதிரியான விதிமுறைகளுடன் யார் வெற்றிக்கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்பதுதான் போட்டி.
அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான சூட்சுமங்களுடன் விளையாடுவார்கள். சிலருக்கு கேமரா எல்லாம் பரிட்சையமாக இருக்கும். சிலருக்கு அது பற்றிய பிரக்ஞ்சைகள் எல்லாம் இருக்காது. சிலர் புரோமோவில் இடம்பெறுவது எப்படி என்பதை கண்ணாக கொண்டு விளையாடுவார்கள். இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளன. முதல் பிக்பாஸ் டைட்டிலை ஆரவ் வென்றார், அதற்கடுத்து ரித்விகா, முகேன் ராவ், ஆரி ஆகியவர்கள் வென்றார்கள். இதுவரை ஆண்களே டைட்டிலை வென்று வருவது சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்து வருகிறது. இதுவரையில் சீசன் ஆரம்பிக்கும்போதே சிலருக்கு ஆர்மியும் உருவாகும். ஓவியா ஆர்மி மிகுந்த பிரசித்தி பெற்றது. லாஸ்லியா, முகேன், கவின், ஆரி, யாஷிகா, ஆகியவர்களுக்கு ஆர்மிகள் இருந்தன.
இந்த சீசனில் அந்த அளவுக்கு ஆர்மி யாருக்கும் உருவாகவில்லை. பாவனி, மதுமிதா, அக்ஷரா ஆகியோருக்கு ஆங்காங்கே ஆர்மிகள் உள்ளதை காண முடிகிறது.
இந்நிலையில், 18 போட்டியாளர்களின் ஒரு வார சம்பள விவரங்கள் வெளியாகியுள்ளன.
1.இசை வாணி - ரூ. 1 லட்சம்
2.ராஜு ஜெயமோகன் - ரூ. 1.5 லட்சம்
3.மதுமிதா - ரூ. 2.5 லட்சம்
4.அபிஷேக் ராஜா - ரூ. 1.75 லட்சம்
5.நமீதா மாரிமுத்து - ரூ. 1.75 லட்சம்
6.பிரியங்கா தேஷ்பாண்டே - ரூ. 2 லட்சம்
7.அபிநய் - ரூ. 2.75 லட்சம்
8.பாவனி ரெட்டி - ரூ. 1.25 லட்சம்
9.சின்னப்பொண்ணு - ரூ. 1.5 லட்சம்
10.நாடியா சங் - ரூ. 2 லட்சம்
11.வருண் - ரூ. 1.25 லட்சம்
12.இமான் அண்ணாச்சி - ரூ. 1.75 லட்சம்
13.அக்ஷரா ரெட்டி - ரூ.1 லட்சம்
14.சுருதி - ரூ. 70,000
15.ஐக்கி பெர்ரி - ரூ.70,000
16.தாமரைச்செல்வி - ரூ.70,000
17.சிபி - ரூ.70,000
18.நிரூப் - ரூ.70,000
இவை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனாலும் இதுதான் சம்பள விவரம் என்றும் கூறப்படுகிறது.
முதல் சீசனிலிருந்தே நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கு உள்ளிட்ட சில மொழிகளில் இந்த நிகழ்ச்சியின் சீசனுக்கு சீசன் தொகுப்பாளர் மாறிய நிலையில், தமிழில் மட்டுமே தொடர்ந்து கமல்ஹாசன் இருந்து வருகிறார். இந்த சீசன் தொடர்பாக கமல்ஹாசன் சம்பளம் குறித்தும் தகவல் கசிந்துள்ளது. அவர் இந்த சீசனுக்காக 60 கோடி ரூபாய் சம்பளமாக பெறப் போகிறாராம். தெலுங்கில் தற்போது பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நாகர்ஜுனாவுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் என்று கூறப்படுகிறது. சீசன் 4இல் அவருக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.