ஆல்பம், வெயில், அங்காடி தெரு, காவியத் தலைவன், அரவான் போன்ற சிறந்த படங்களை இயக்கியவர் வசந்தபாலன். எளிய மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் உணர்வுகளையும் தொடர்ந்து பதிவு செய்யும் வசந்தபாலனுக்கென்று தனி ரசிகர் வட்டம் உண்டு.
இவர் தற்போது இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷை வைத்து “ஜெயில்” என்ற படத்தை இயக்கியுள்ளார். க்ரிக்ஸ் சினி கிரியேஷன் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்திருக்கும் இப்படத்தில், தேன் படம் மூலம் அறிமுகமான அபர்ணதி நாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், இசையமைப்பாளர் சிற்பியின் மகனான நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தின் நாயகனான ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவையும், ரேமண்ட் டெரிக் க்ரிஸ்ட்டா எடிட்டிங்கையும் கவனித்துள்ளனர். ஜி.வியின் இசையில், கபிலன், சினேகன், தெருக்குரல் அறிவு, பேரன்பு படத்தில் பாடல் எழுதிய கருணாகரன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
கபிலன் வரிகளில் தனுஷ் பாடிய காத்தோடு காத்தானேன் பாடல் வெளியாகி யூட்யூபில் இரண்டு கோடி பார்வையாளர்களை கவர்ந்து படத்துக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்திருக்கும் சூழலில் படத்தை வெளியிடுவது தொடர்பாக விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடந்துவந்தது. இதற்கிடையே, ஜெயில் திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் பார்த்துவிட்டது எனவும் அதனை வெளியிடப்போகிறது எனவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், ஜெயில் திரைப்படத்தை பார்த்து ஈர்க்கப்பட்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அதனை தனது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் வெளியிட இருக்கிறார்.
இதுகுறித்து வசந்தபாலன் தனது முகநூல் பக்கத்தில், “ஜெயில் திரைப்படத்தைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்ட பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா அவர்கள் உலகமெங்கும் படத்தை வெளியிடுகிறார். விரைவில் இசை வெளியீடு... திரைப்பட வெளியீட்டு செய்திகள் வரும்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Rajinikanth : ” ரொம்ப சந்தோஷமான ரெண்டு விஷயம்” : ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் வைத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..
Biggboss Tamil 5 | நேராவே சொல்லிடுறேன்... என்ன இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க.. கமல் வைத்த ட்விஸ்ட்...